பொது வருங்கால வைப்பு நிதித் (PPF) திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெரும் வட்டி வருமானத்திற்கு முற்றிலும் வரி இல்லை. தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
புதிய விதிகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு PPF கணக்கின் சில அடிப்படை விதிகளை பற்றி பார்ப்போம். ஒரு நபர் ஒரே ஒரு PPF கணக்கை மட்டுமே திறக்க முடியும். நீங்கள் NRI-யாக இருந்தால் புதிய PPF கணக்கைத் திறக்க முடியாது. இந்தியாவில் வசித்துக் கொண்டிருக்கும் ஒருவர் PPF கணக்கைத் திறந்து பின்னர் NRI-யாக மாறும் பட்சத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். ஆனால் திட்டத்தின் முதிர்வுக் காலம் முடிந்த பிறகு கண்டிப்பாக நிதியை திரும்ப பெற வேண்டும். NRI-யாக இருப்பவர்களுக்கு PPF திட்டத்தை நீட்டிப்பதற்கான விருப்பம் இல்லை.

எந்தவொரு என்ஆர்-ஐயும் பிபிஎஃப் கணக்கை நீட்டித்திருந்தால், அது ஒழுங்கற்ற கணக்காக வகைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் 30, 2024 முதல் வட்டி பெறுவது நிறுத்தப்படும்.
PPF கணக்கு வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சமீபத்திய மாற்றங்கள்: தனிநபர்கள் ஒரு பான் கார்டுக்கு ஒரே ஒரு PPF கணக்கை மட்டுமே திறக்க முடியும். ஆனால் சிலர் வெவ்வேறு வங்கிகளை பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் கணக்குகளை தொடங்குவதன் மூலமாகவோ பல PPF கணக்குகளை வைத்திருக்கின்றனர்.
எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட PPF கணக்குகள் ஒழுங்கற்றவையாக பார்க்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் முதன்மை கணக்கைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு நிதியாண்டுக்கு PPF திட்டத்தில் 1.5 லட்சம் வரை அதிகபட்சமாக முதலீடு செய்யலாம். எனவே மொத்த கணக்கையும் சேர்த்து ஆண்டு முதலீடு 1.5 லட்சம் என்ற உச்சவரம்பிற்குள் இருந்தால் இரண்டு மூன்று கணக்குகளிலும் உள்ள மொத்த தொகையும் ஒரே ஒரு முதன்மை கணக்குடன் இணைக்கப்படும். அதுவே அதையும் தாண்டி முதலீடு செய்யப்பட்டிருந்தால் எந்தவித வருமானமும் வழங்கப்படாமல் அதாவது 0 சதவீத வட்டு விகிதத்தில் பணம் திருப்பி அளிக்கப்படும்.
சரி ஒழுங்கற்ற கணக்குகள் என்று கூறப்படுகிறது.. அது எந்தெந்த சூழ்நிலைகளில் பொருந்தும்.. அதற்கான உதாரணம் என்ன என்று கேட்பவர்களுக்காக..
பெற்றோர்கள் இருவரும் ஒரே குழந்தைக்கு தனித்தனியாக PPF கணக்கை திறந்திருந்தால் அவை ஒழுங்கற்ற கணக்காகக் கருதப்படும். அதேபோல பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இருவரும் ஒரே குழந்தைக்கு PPF கணக்கைத் திறந்திருந்தால் அதுவும் ஒழுங்கற்ற கணக்காக கருதப்படும்.
ஒரு குழந்தைக்கு தனித்த PPF கணக்கும் பெற்றோருடன் கூட்டுக்கணக்காக ஒரு PPF கணக்கும் இருந்தால் இது போன்ற கணக்குகளும் ஒழுங்கற்றக் கணக்காக கருதப்படும். ஆனால் குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட மைனர் கணக்குகளுக்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications