பெரும்பாலானோர் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற பிபிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல வருமானம் ஈட்டும் திட்டம். அதோடு வரி விலக்கும் வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை PPF திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் சில நேரங்களில் வாழ்க்கையில் திடீரென்று பணத் தேவை ஏற்படும்.
அத்தகைய சூழலில் PPF திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத்தை எடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று PPF முதலீட்டுக்கு எதிராகக் கடன் பெறலாம் அல்லது செய்யப்பட்ட முதலீட்டிலிருந்து சிறிதளவு பணத்தை திரும்பப் பெறலாம். இதில் கேள்வி என்னவென்றால் 2 வழியில் சிறந்தது எது என்பதுதான்.

கடன் வாங்குவதா? அல்லது பணத்தை எடுப்பதா?.. இரண்டுக்குமே அவற்றின் சொந்த விதிகள், நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. நீங்கள் எப்போது கடன் வாங்க வேண்டும்? எப்போது PPF திட்டத்திலிருந்து பகுதியளவு பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டும் என்பது உங்களுடைய நிதி நலனைப் பொறுத்தது.
PPF முதலீட்டிற்கு எதிரான கடன்: நீங்கள் PPF கணக்கு திறந்து அதிலிருந்து 3 மூன்று ஆண்டுகள் கழித்து அதாவது மூன்றாவது நிதியாண்டில் இருந்து ஆறாவது நிதியாண்டின் இறுதிவரை மட்டுமே பிபிஎஃப் திட்டத்திற்கு எதிராக கடன் வாங்க முடியும்வ . உதாரணமாக நீங்கள் 2022-ஆம் நிதியாண்டில் PPF கணக்கை திறந்திருக்கிறீர்கள் என்றால். 2024-ஆம் நிதியாண்டு முதல் 2027-ஆம் நிதியாண்டு வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
எவ்வளவு கடன் கிடைக்கும்?: நீங்கள் கடன் பெற விண்ணப்பிப்பதற்கு ஒரு நிதியாண்டுக்கு முன்னர் அதாவது இரண்டாவது நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறதோ? அந்த பேலன்ஸில் 25 சதவீதம் வரை கடன் பெற முடியும்.
எவ்வளவு வட்டி?: PPF கடனுக்கான வட்டி விகிதம் தற்போதைய பிபிஎஃப் திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 1 சதவீதம் அதிகமாக இருக்கும். இதற்கு முன்னர் இந்த வட்டி விகிதம் 2 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் PPF திட்டத்திற்கு 1 சதவீத வட்டி விகிதம் பெறுகிறீர்கள் என்றால்.. கடனுக்கு 8.1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
எப்படி திருப்பி செலுத்துவது?: நீங்கள் கடன் வாங்கிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை கடனை திருப்பிச் செலுத்தலாம். அதாவது 36 மாதங்களுக்குள் அசலை திருப்பி செலுத்திய பிறகு இரண்டு மாத தவணைகளில் வட்டியை திருப்பி செலுத்தலாம். 36 மாதங்களில் அசலை திருப்பி செலுத்த முடியாவிட்டால் வட்டி விகிதம் 1 சதவீதத்திற்கு பதிலாக 6 சதவீதமாக இருக்கும். அப்படியானால் 7.1 சதவீதத்தோடு 6 சதவீதம் அதிகமாக வரும் போது 13.1% வட்டி செலுத்த வேண்டும்.
பகுதியளவு திரும்பப் பெறுதல்:
எப்போது பணம் எடுக்கலாம்?: PPF கணக்கு தொடங்கிய ஏழாவது நிதியாண்டில் இருந்து பகுதியளவு பணத்தை திரும்ப எடுக்கலாம். அதாவது நீங்கள் 2019 ஆம் நிதியாண்டில் கணக்கு திறந்திருக்கிறீர்கள் என்றால் 2026-ஆம் நிதியாண்டிலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
எவ்வளவு பணம் எடுக்கலாம்?: நீங்கள் பணம் எடுக்கும் நிதியாண்டிற்கு முந்தைய நிதியாண்டின் இறுதியில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறீர்களோ அதிலிருந்து 50 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்.
பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டுமா?: இல்லை, இது கடன் கிடையாது. உங்களுடைய சேமிப்பு, எனவே நீங்கள் திரும்பப் பெற்ற பணத்தை திரும்ப டெபாசிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு வட்டி உண்டா?: இல்லை, நீங்கள் எடுக்கும் பணம் உங்களுடைய சொந்த பணம், எனவே இதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்ற விதி கிடையாது.
கடன் Vs பகுதியளவு திரும்பப் பெறுதல்: கடன் நீங்கள் கடன் வாங்குவதற்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும் உங்களுடைய பாக்கெட்டில் இருந்து கூடுதலாக பணம் வங்கிக்கு செல்கிறது. ஆனால் உங்கள் பிபிஎஃப் கணக்கில் மீதம் இருக்கும் தொகைக்கு தொடர்ந்து வட்டி வந்து கொண்டே இருக்கும். நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால் அசல் முதலீடு அதிகம் பாதிக்கப்படாது.
திரும்பப் பெறுதல்: பணத்தை எடுப்பதற்கு நீங்கள் எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், உங்களுடைய PPF பேலன்ஸ் இதனால் குறையும். எனவே எதிர்காலத்தில் குறைவான கூட்டு வட்டி வருமானம் பெறுவதற்கு வாய்ப்புண்டு. நீண்ட காலத்திற்கு இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எனவே உங்கள் நிதி நலனை கருத்தில் கொண்டு, ஆராய்ந்து, நிதி ஆலோசகரின் ஆலோசனைப் பெற்று முடிவெடுங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications