குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக பெற்றோர்கள் பல முதலீட்டு திட்டங்களை ஆராய்ந்து அதன் பின் ஒன்றை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டங்கள் மக்களிடையே பிரபலமாக இருக்கிறது. ஆனால் நடந்து முடிந்த பட்ஜெட்டில் NPS வாத்சல்யா என்ற புதிய திட்டம் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்தப் பதிவில் உங்கள் குழப்பத்திற்கு பதில் சொல்லும் வகையில் PPF மற்றும் NPS வாத்சல்யா ஆகிய 2 திட்டங்களையும் விரிவாக பார்ப்போம். அதன்பின் உங்கள் குழந்தைகளுக்கு எந்த திட்டம் ஏற்றது என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
NPS வாத்சல்யா என்பது நடந்து முடிந்த 2024-ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய ஓய்வூதியத் திட்டமாகும். இது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் ஓய்வூதிய சேமிப்பை முன்கூட்டியே தொடங்குவதற்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம். குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது செல்வமகள் சேமிப்பு திட்டம் தான். ஆனால் தற்போது NPS வாத்சல்யா திட்டமும் அவற்றுள் இணைந்துள்ளது.

NPS வாத்சல்யா திட்டம் என்றால் என்ன?: 2024 பட்ஜெட்டில் NPS வாத்சல்யா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு NPS கணக்கைத் திறந்து, குழந்தைக்கு 18 வயதை அடையும் வரை ஒவ்வொரு மாதமும் அல்லது வருடமும் ஒரு தொகையை சேமிக்கலாம்.
எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மேஜரானதும், அதாவது 18 வயதை அடைந்த பிறகு இந்தத் திட்டத்தில் சேமிக்கப்பட்ட தொகை ஒரு நிலையான NPS கணக்காக மாற்றப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் "Annuity" கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
NPS வாத்சல்யாவிற்கு யார் தகுதியானவர்?: இந்தியக் குடிமக்கள், NRI-கள் அல்லது OCI-கள் என அனைத்துப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.
பொதுவாக NPS திட்டம் டயர் 1 மற்றும் டயர் 2 என 2 கணக்குகளைக் கொண்டது. இந்தத் திட்டம் பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் என்பதால், இதன் லாபம் பங்குச்சந்த ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து மாறுபடும்.
இதனால் ஓய்வூதியத்தின்போது கிடைக்கக்கூடிய வருமானத்தை நம்மால் அளந்து கூறி விட முடியாது. ஆனால் NPS திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 9 முதல் 12 சதவீதம் வரை சராசரியான லாபம் கிடைக்கும். இது சுகன்ய சம்ரித்தி யோஜனா மற்றும் பிற சேமிப்பு திட்டங்களை விட அதிக லாபத்தை தரக்கூடியது.
PPF திட்டம்: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்தியாவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். சிறந்த வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் மற்றும் குறைந்த ஆபத்துக்கு பெயர் பெற்ற இந்தத் திட்டம், நாட்டின் மிகவும் பிரபலமான முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். தனிநபர்கள் தங்களுக்காகவோ அல்லது மைனர் சார்பாகவோ PPF கணக்கைத் திறக்கலாம்.
மைனர் குழந்தை 18 வயதை அடையும் வரை PPF கணக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் நிர்வகிக்கப்படும். அதன் பின் அந்த குழந்தைகளின் பெயரிலேயே PPF கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.
PPF திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள், அதன் பிறகும் முதலீட்டாளர் விருப்பத்தின் பேரில் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தின் நன்மைகளை நீட்டித்துக் கொள்ள முடியும்.
PPF திட்டத்திற்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது இந்த காலாண்டுக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. மேலும் PPF திட்டத்தில் 80-சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக PPF திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வரி இல்லை.
NPS வாத்சல்யா திட்டத்திற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு இனிவரும் காலங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications