போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் அவற்றின் முதலீட்டு தொகை, முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதங்களைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு வகையான முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற PPF நீண்டகால சேமிப்பு திட்டங்களுக்கு இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் திட்டமாக உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். அப்படி PPF திட்டத்தில் முதலீடு செய்வதானால் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
தற்போது இந்த PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது காலாண்டுக்கு ஒரு முறை அரசாங்கத்தால் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு எந்த வட்டி விகிதம் வழங்கப்பட்டதோ அதே வட்டி விகிதத்தை மாற்றாமல் இந்த காலண்டிற்கும் அதாவது ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலாண்டிற்கும் நிர்ணயித்துள்ளது.

எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் நீங்கள் PPF கணக்கைத் தொடங்கலாம். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF கணக்கில் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இது சற்று நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.
சரி இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
உத்திரவாதமான வருமானம்: இது அரசாங்கத் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும். அபாயம் இல்லாத நீண்ட கால சேமிப்பை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் ஏற்றது.
வரிச் சேமிப்பு: பல இந்தியர்கள் PPF திட்டத்தை விரும்புவதற்கான முக்கிய காரணம். இதில் வழங்கப்படும் வரிச் சலுகைகள். வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் தனிநபர்கள் ஒரு PPF கணக்கிற்கு ஆண்டுதோறும் 3.5 லட்சம் வரை வரி விலக்கைப் பெறலாம்.
PPF ஓய்வூதிய கார்பஸை உருவாக்க உதவுகிறது: PPF என்பது ஓய்வூதியத்திற்காக சேமிப்பதற்கான சிறந்த வழியாகும். ஏனெனில் இதற்கு 15 வருட லாக்-இன் காலம் உண்டு. இது நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்கிறது மற்றும் கூட்டு வட்டியின் நன்மையை வழங்குகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications