கூகுள் நிறுவனம் தங்களுடைய தலைமை பொறுப்புகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி Chief technologist பொறுப்பு இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகுள் தேடு பொறி பிரிவுக்கு மூத்த துணை தலைவராக இருந்த பிரபாகர் ராகவனை Chief technologist ஆக பணி மாற்றம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தில் இதுவரை Chief technologist பொறுப்பில் நெக் பாக்ஸ் என்பவரே பணிபுரிந்து வந்தார். தற்போது அவருக்கு பதிலாக பிரபாகர் ராகவனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூகுளின் பல்வேறு பிரிவுகளுக்கும் 12 ஆண்டுகளாக தலைமை வகுத்து வந்த பிரபாகர் ராகவன் இனி Chief technologist ஆக பணிபுரிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் சுந்தர் பிச்சையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் பிரபாகர் மீண்டும் தன்னுடைய கணினி அறிவியல் பிரிவுக்கே திரும்புகிறார். இந்த முறை அவருக்கு Chief technologist என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு முதலில் பிரபாகர் ராகவன் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டிலிருந்து இவர் கூகுள் நிறுவனத்தின் knowledge & information பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
சென்னையை சேர்ந்தவர் தான் பிரபாகர் ராகவன், ஐஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்த இவர் அமெரிக்காவுக்கு சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் மேல்படிப்பை முடித்தார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் பிஎச்டி பட்டமும் பெற்றுள்ளார்.
முதலில் ஐபிஎம் நிறுவனத்தில் ஆய்வு பிரிவில் தன்னுடைய பணியை தொடங்கியவர் தான் பிரபாகர் ராகவன் அங்கே 14 ஆண்டுகள் வேலையில் இருந்த அவர் 2004 ஆம் ஆண்டில் யாஹூ நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கே யாஹூ தேடு பொறி மற்றும் விளம்பர பிரிவுகளில் பணிபுரிந்த அவர் Chief Strategy Officer என பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2012 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
6 வருடங்களில் விளம்பரங்கள் மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைவரானார். பின்பு கூகுள் செயலிகள், கூகுள் கிளவுட், மற்றும் user interface ஆகியவற்றை மேற்பார்வையிடும் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர்களுள் ஒருவராகப் பணியாற்றிய இவர், இனி கூகுள் நிறுவனத் தேடல் மற்றும் அசிஸ்டன்ட் (Google search and assistant) பிரிவின் தலைவராக 2020ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார்.
இவர் கணினி பொறியியலில் Algorithm-கள் குறித்து இணை ஆசிரியராக இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். மேலும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறையின் ஆலோசனை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications