உலகளவில் ஆடம்பர பேஷன் பிராண்ட் என்றால் நம் நினைவுக்கு டக்குன்னு வரும் சில பிராண்டுகளில் Versace மிக முக்கியமானது. கொரோனா காலத்தில் பங்குச்சந்தைகள் அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டு இருந்த வேளையில் பெரும் பணக்காரர்கள் கையில் இருக்கும் காசை வைத்து ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்தனர்.
குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளில் இருந்து அதிகப்படியான மக்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்தனர். ஆனால் இந்த மோகம் நாளுக்கு நாள் குறைந்து வழக்கம் போல் ஆடம்பர பிராண்டுகளின் விற்பனை தேக்கம் அடைந்தது. இதற்கு முக்கியமான அதிகரித்து வரும் பணவீக்கம், பணிநீக்கம் தான்.

இந்த நிலைில் ஆடம்பர பேஷன் துறையில் ஒரு முக்கிய திருப்பமாக, பிரடா நிறுவனம் அமெரிக்காவின் காப்ரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து வெர்சேஸ் நிறுவனத்தை 1.25 பில்லியன் யூரோக்களுக்கு, அதாவது சுமார் 1.39 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆடம்பர லைப்ஸ்டைல் பிராண்டுகள் விற்பனை செய்யப்படுவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்.
இந்த கைப்பற்றல் மூலம் பிராடா ஆண்டுக்கு 6 பில்லியன் யூரோக்களை வருமானம் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆடம்பர சாம்ராஜ்ஜியமாக உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய ஆடம்பர சந்தை மந்த நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், எல்விஎம்ஹெச் மற்றும் கெரிங் போன்ற பிராண்டுகளுடன் போட்டிப்போடும் திட்டத்துடன் பிராடா, வெர்சேஸ் பிராண்டை மொத்தமாக வாங்குகிறது.
வியாழக்கிழமை இந்த பிராண்ட் கைப்பற்றும் திட்டம் கையெழுத்தானது. பிரடா நிறுவனம் காப்ரி ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்த வெர்சேஸ் என்ற இத்தாலிய பேஷன் நிறுவனத்தை அதன் கடன்களை சேர்த்து மொத்தம் 1.375 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. இந்த இணைப்பு, இத்தாலிய பேஷன் துறையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஆடம்பர பொருட்களுக்கான நுகர்வோர் தேவை குறைந்து வரும் நிலையிலும், பிரடா நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துடன் வெர்சேஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது. வெர்சேஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையுடன் செயல்பட்டு வந்த நிலையில் சுமார் 2.15 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 1.39 பில்லியன் டாலர் என்ற தள்ளுபடி உடன் வாங்கியுள்ளது.
Prada நிர்வாகம் Versace பிராண்ட்டை வாங்கிய பின்பும் இதை பெயரிலேயே இயங்கும், மேலும் பிராடா நிர்வாகம் Versace பிராண்டின் கீழ் பல புதிய பொருட்களை அறிமுகம் செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications