ஜன்னல் சீட்டுனு எக்ஸ்ட்ரா காசு வாங்குனியே.. ஜன்னல் எங்க? – இண்டிகோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

பொதுவாக விமானங்களில் பயணம் செய்பவர்கள் பலரும் ஜன்னல் அருகே இருக்கும் இருக்கையை பெறவே விரும்புவார்கள். அப்போது தான் நாம் வானில் பறக்கும் போது மேகங்களையும் , நம் ஊர்களையும் பார்த்து ரசிக்க முடியும்.

பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ பயணி ஒருவருக்கு ஜன்னல் அருகே இருக்கை பெற கூடுதல் கட்டணம் வாங்கிவிட்டு அவருக்கு ஜன்னலே இல்லாத இருக்கையை ஒதுக்கி இருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜன்னல் சீட்டுனு எக்ஸ்ட்ரா காசு வாங்குனியே.. ஜன்னல் எங்க? – இண்டிகோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருபவர் பிரதீப் முத்து . இவரை நாம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் காண முடியும். ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் வர்ணனையாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் அண்மையில் இண்டிகோ விமானத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை புகைப்படமாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் . அவருடைய இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

தன்னுடைய பதிவில் அவர் "டேய் இண்டிகோ நான் ஜன்னல் இருக்கைக்காக கட்டணம் செலுத்தினேன், ஜன்னல் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார். டிராவல் பரிதாபங்கள் என்ற ஹேஷ்டேக்கில் புகைப்படத்தோடு பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு சுமார் ஒன்பது லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இதனை அடுத்து இண்டிகோ நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு அவர் பயணம் செய்த விமானத்தின் விவரங்களை கேட்டுள்ளதாம். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என கூறி இருக்கிறதாம்.

இந்த பதிவு சமூக வலைதள வாசிகள் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. ஒரு பயனர் நீங்கள் ஜன்னல் அருகே இருக்கும் இருக்கைகாக தானே கட்டணம் செலுத்தினீர்கள் ஜன்னலுக்காக இல்லை . ஜன்னல் வேண்டும் என்றால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமோ என்னமோ என நக்கலாக பதிவு செய்துள்ளார்.

ஜன்னல் சீட்டுனு எக்ஸ்ட்ரா காசு வாங்குனியே.. ஜன்னல் எங்க? – இண்டிகோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

ஒரு பயனர் உங்களை புதிதாக இமேஜினேஷன் கிளாஸ் என்ற பிரிவில் பயணம் செய்ய வைத்துள்ளது இண்டிகோ. இதில் நீங்கள் ஜன்னல் இருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஜன்னல் இருக்கும் இல்லை என கிண்டல் செய்துள்ளார்.

கடந்தாண்டு இதே போல தான் அயர்லாந்தை சேர்ந்த ரியான் ஏர் என்ற நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு ஜன்னல் அருகே இருக்கும் இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வாங்கிவிட்டு அவருக்கு ஜன்னலே இல்லாத இருக்கையே ஒதுக்கீடு செய்தது. இதனை வாடிக்கையாளர் புகைப்படமாக எடுத்து பதிவு செய்திருந்தார். அதற்கு அதற்கு அந்த நிறுவனம் நீங்கள் வெறுமனே இதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் அது ஜன்னலாக மாறிவிடப் போகிறதா என பதிலுக்கு பதிவிட்டது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது.

story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+