டெல்லி: PMAY திட்டம் முக்கியமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் (EWS), குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள் (LIG) மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குழுக்கள் (MIG) ஆகியவற்றை மையமாக வைத்து செயல்படுகிறது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
நாட்டில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடுகளை வழங்குவதையும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வீட்டுப் பற்றாக்குறையைப் போக்குவதையும் குறிக்கோளாகக் கொண்ட ஒரு முயற்சி இந்தத் திட்டம். மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு தற்போது இத்திட்டத்தின் அமலாக்க காலத்தை டிசம்பர் 2024 வரை நீட்டித்துள்ளது.

இந்தத் திட்டம், தேவை-உந்துதல் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது, இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பாதிக்கும் குடும்பத்தினர் இந்த திட்டத்துக்குத் தகுதியானவர்கள். இந்தத் திட்டத்துக்குத் தகுதி பெறுவதற்கு ஒருவருக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் நிரந்தர வீடு இருக்கக்கூடாது. பிஎம்ஏஒய் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.2.3 லட்சம் மானியமாக வழங்கப்படும். கடன் தொகையான ரூ.12 லட்சத்தில் இந்த மானியத் தொகை ரூ.2.3 லட்சம் கழித்துக் கொள்ளப்படும். பாக்கித் தொகையான ரூ.9.7 லட்சத்தை மாதாந்திர தவணைகளாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு அல்லது வீடு விரிவாக்கம் மற்றும் பழுது பார்த்தல் போன்ற காரணங்களுக்கு கடன் பெறலாம்.
கடன் திரும்பச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 20 ஆண்டுகள். இந்தக் கடனை வாங்குவதற்கு கடன் தவணை முடியும்போது வயது வரம்பு 70 ஆக இருக்க வேண்டும்.
பக்காவான நிரந்தர வீடு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கடன் பெற முடியாது.
கடன் ஒப்புதல் பெற்ற 3-4 மாதங்களில் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மானியத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.


Click it and Unblock the Notifications