சென்னை: பொதுவாக அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பது எல்லா தரப்பு மக்களின் விருப்பமாகும். உணவும் உடையும் இருப்பிடமும் எல்லோருக்கும் கட்டாயம். இயலாதோர்க்கு உணவும் உடையும் வழங்கி உதவும் அரசு தற்போது குறைந்த விலையில் வீடும் வழங்கி உதவுகிறது. இந்த திட்டத்திற்கு யார் தகுதி ஆனவர்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 25 ஜூன் 2015 அன்று "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்" ஒன்றை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு இல்லாதவர்களும், தனக்கென ஒரு வீடு வாங்க இயலாதவர்களும், இதன் மூலம் பயனடையலாம்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நடுத்தர குடும்பத்தில் வசிக்கும், சொந்தமாக வீடு கட்ட இயலாத மற்றும் வீடு ஒன்றை வாங்க இயலாத பயனாளர்களுக்கு குறைந்த விலையில் வீடு வழங்கி அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதே பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளர்கள் சில குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் நபர்கள் தனக்கென சொந்த வீடு இல்லாத குடும்பமாக இருக்க வேண்டும் அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீடுகளிலோ கச்சா சுவர்கள் மற்றும் கச்சா கூரை கொண்ட வீடுகளிலோ வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் 25 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவற்ற குடும்பத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 16 முதல் 59 வயது வரையிலான ஆண் நபர்கள் இல்லாத குடும்பமாக பயனாளியின் குடும்பம் இருக்கவேண்டும்.
மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பமாக இருக்க வேண்டும். சொந்த நிலம் மற்றும் குடும்பமாகவும் சாதாரண தொழில் மூலம் வருமானம் ஈட்டும் குடும்பமாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்களாகவும் பழங்குடியினர்களாகவும் சிறுபான்மையினராகவும் இருக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி வேறு சில தகுதிகளும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கு இருக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு.
விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் பெயர் உள்ளவராகவும் இந்தியாவின் வாக்களிக்கும் தகுதி உள்ள வாக்காளராகவும் இருத்தல் வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
நிரந்தர வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், அவர்களின் பெயர் குடும்ப அட்டை அல்லது வறுமைக்கோட்டின் கீழ் இருக்க வேண்டும்.
ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை
2. மொபைல் நம்பர்
3. பேங்க் பாஸ்புக்
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
5. தூய்மை இந்தியா இயக்கம்(Swachh Bharat Mission) பதிவு எண்
மேற்கண்ட தகுதிகளையும் ஆவணங்களையும் வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://pmaymis.gov.in)சென்று விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications