பயிர் சேதத்திற்கு முழுக் காப்பீடு.. ப்ரீமியம் ரொம்ப ரொம்ப கம்மி! அரசு வழங்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயத்தில் ஈடுபடுவது சாதாரண விஷயம் கிடையாது. இயற்கை பேரிடர்களான வறட்சி, புயல், மழை, வெள்ளம், சூறாவளி என எதிர்பாராத சூழ்நிலைகளால் பயிர் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் வரும் இழப்புகளை சரி செய்து விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம். இந்தத் திட்டத்தினை ஃபசல் பீமா யோஜனா திட்டம் என்றும் அழைப்பார்கள்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு தகுதி பெறும் விவசாயிகளுக்கு எதிர்பாராத கால நிலைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அரசின் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதை நேரடியாக வங்கி கணக்கிலேயே வரவு வைத்து விடுவார்கள்.

பயிர் சேதத்திற்கு முழுக் காப்பீடு.. ப்ரீமியம் ரொம்ப ரொம்ப கம்மி! அரசு வழங்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்: விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்க வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற அதிகாரப்பூர்வ இணையதளமான pmfby.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும் இழப்பீட்டுத் தொகை நேரடியாக அந்த விவசாயின் வங்கி கணக்கிலேயே டிபிடி ட்ரான்ஸ்பர் மூலம் வரவு வைக்கப்படும்.

அதேபோல விண்ணப்பித்த முடித்ததும் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை என்ன? என்பதை எளிதில் சரி பார்த்துக் கொள்ளலாம். இதற்காக எந்த அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Also Read

எந்தெந்த பாதிப்புகளால் ஏற்படும் சேதத்திற்கு காப்பீடு கிடைக்கும்?: பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறட்சி, வெள்ளம், சூறாவளி, ஆலங்கட்டி மழை, பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல், உள்ளூர் பேரிடர்கள், நீர் தேங்கி இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பருவமழை அல்லாத காலங்கள் அல்லது அதிக அளவிலான பருவமழை அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்கிறது.

எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?: காரீஃப் பயிர்களுக்கு அதிகபட்சமாக 2% மட்டுமே விவசாயிகள் செலுத்த வேண்டும். உதாரணமாக நெல், சோளம், கம்பு போன்ற பயிர்களுக்கு 2 சதவீத பிரீமியத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகளே செலுத்திவிடும். அதேபோல ராபி பயிர்களுக்கு 1.5% தொகையை விவசாயிகள் செலுத்தினால் போதும். விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் காப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு பல முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களை கைகோர்த்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2027-ஆம் நிதியாண்டில் பட்ஜெட்டில் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.12,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.92.46 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் விவசாயிகளிடமிருந்து ரூ.26.33 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் ரூ.2.06 கோடி காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவடை முடிந்த பிறகு 2 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும்.

காப்பீட்டை உடனடியாக செயல்படுத்தவும் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காக்கவும் பயிரிழப்பு குறித்த விபரங்களை அரசு செயற்கைக்கோள், ட்ரோன் மற்றும் மொபைல் ஆப் மூலம் துல்லியமாக கண்காணித்து தொகையை விரைவாக வழங்கி வருகிறது.ஆனால் போர், கலவரம், திருட்டு மற்றும் மனிதத் தவறுகளால் ஏற்படும் எந்த ஒரு இழப்புக்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு கிடைக்காது.

பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து "பார்மர் கார்னர்" என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் பார்ம் இருக்கு.ம் அதில் உங்களுடைய எல்லா விவரங்களையும் நிரப்ப வேண்டும். உங்களுடைய பெயர், பாஸ் புக் விவரங்கள் மாநிலம், மாவட்டம் போன்ற அனைத்து விவரங்களும் கேட்கப்படும். அதன் பிறகு உங்களுடைய அக்கவுண்ட் விபரங்களை வழங்கி பேமென்ட் செய்ய வேண்டும்.பயிர் சேதம் ஏற்பட்டால் விபரங்களை வழங்கி கிளைம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+