என்ன கொடுமை இது.. தகுதியானவர்களோ 64 லட்சம் பேர்.. 14 லட்சம் பேருக்கும் மட்டுமே வேலை..!

டெல்லி : நிலவி வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக, பொருளாதாரம் மிக பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருகிறது. இந்த நிலையில் பணி நீக்கம், வேலை இல்லா நிலை என அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 5 டிரில்லியன் டாலர் இலக்கு அடைய முடியுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒரு புறம் மத்திய அரசின் இலக்கான 5 டிரில்லியன் டாலரை அடைய அரசாங்கம் பல்வேறு விதமான நடவடிக்கை இருந்தாலும், வேலை இழப்புகள் குறித்த பயமும் தொடர்ந்து மேலோங்கி வருகிறது.

முக்கிய பிரச்சனையே வேலை இழப்பு தான்

முக்கிய பிரச்சனையே வேலை இழப்பு தான்

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் வேலை இழப்பு, வேலை உருவாக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதிகளவிலான மக்கள் இருந்தும், அவர்கள் சரியான திறனுடன் இருப்பார்களா? என்று சந்தேகமான நிலையிலேயே மோடி அரசு கடந்த 2015ம் ஆண்டு நேஷனல் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் அமைப்பினால் தொடங்கி வைக்கப்பட்டது.

 இளைஞர்களுக்கு பயிற்சி

இளைஞர்களுக்கு பயிற்சி

இந்த நிலையில் திறன் குறைந்த இளைஞர்களுக்கு தொழில்முறை சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, அதன் மூலம் அவர்தாம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டத்தின் குறிக்கோள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் 64.27 லட்சம் மக்கள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14.43 லட்சம் மக்கள் இதன் வேலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்

இவ்வளவு பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்

கடந்த 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் நேஷனல் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (என்எஸ்டிஸி) அமைப்பினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் இந்த, பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்) என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நிலையில் பிஎம்கேவிஒய் திட்டத்தினால் 22.45 சதவிகிதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு திறன் அளிக்க திட்டம்

1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு திறன் அளிக்க திட்டம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் அரசு இந்த திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைப்பின் கீழ் இயங்கும் எம்.எஸ்.டி.இயின் கீழ், 2016 - 2020ம் ஆண்டுக்குள் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

பயிற்றுவிக்க கவுன்சில்

பயிற்றுவிக்க கவுன்சில்

38 துறையை சேர்ந்த திறன் வாய்ந்த நபர்கள் சேர்ந்த கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு பயிற்சி தேவை, பகுப்பாய்வு பாடத்திட்ட மேம்பாடு, பயிற்சி மற்றும் சான்றிதல் உள்ளிட்டவற்றை வழங்க இந்த கவுன்சில்கள் நடவடிக்கை எடுக்கும் என்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் ஆர். கே சிங் எழுத்துபூர்வமான பதிலில் கடந்த திங்கட்கிழமையன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

பயிற்சி கொடுக்க 22.82 லட்சம் பேர் சேர்ப்பு

பயிற்சி கொடுக்க 22.82 லட்சம் பேர் சேர்ப்பு

தற்போது கைவினைஞர்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் மூலம் , அமைந்துள்ள ஐ.டி.ஐக்களின் நெட்வொர்க் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த ஐடிஐக்களில் 22.82 லட்சம் பேர் பயிற்சி அளிப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக வரும் காலத்தில் இன்னும் பயிற்சி பெற்றோர் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

90 லட்சம் வாய்ப்புகள் சரிவு

90 லட்சம் வாய்ப்புகள் சரிவு

சமீபத்தில் அஸிம் பிரேம்ஜி பல்கழைக்கழகத்தின் ஆய்வில் 2011- 2012 மற்றும் 2017 - 2018 வருடத்திற்கான இடையில் இந்தியாவில் மொத்த வேலை வாய்ப்புகளாக 90 லட்சம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது நாட்டில் முதல் முறையாக வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது

நாளுக்கு நாள் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது

இந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது கடந்த 2011 - 2012ல் 474 மில்லியனாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2017 - 2018ல் இது வெறும் 46.5 கோடி வாய்ப்புகளாக குறைந்தது. இந்த இடைப்பட்ட காலவெளியில் 90 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதும் ஒரு வகையில் உண்மை என்றும் கூறப்படுகிறது.

போகிற போக்கை பார்த்தால் எப்படி அரசின் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய முடியும், இன்னும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தால் மட்டுமே இது அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+