பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு எல்பிஜி எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று பார்த்தால் ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதாகும். குறிப்பாக மரம் மற்றும் நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எல்பிஜி எரிவாயு வழங்கி சுற்றுப்புறத்தையும் பெண்களின் நலனையும் பாதுகாப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
முக்கியமாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் சுத்தமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதையும்.. தீங்கு விளைவுக்கும் புகை தொடர்பான நோய்களிலிருந்து பெண்களை பாதுகாப்பதையும்.. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திட்டமாகும்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: முதலில் https://www.pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். ஹோம் பேஜில் இருக்கும், "Apply for New Ujjwala 3.0 Connection" என்ற லிங்கைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று கேஸ் ஏஜென்சி விருப்பங்களைக் காண்பிக்கும் புதிய பக்கம் திறக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
ஸ்டெப் 3: ஏஜென்சியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்குரிய இணையதளத்தைப் பார்வையிடவும். உதாரணமாக, நீங்கள் பாரத் கேஸை தேர்வு செய்தால், பாரத் கேஸ்-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 4: நீங்கள் தேர்ந்தெடுத்த ஏஜென்சியின் இணையதள ஹோம் பேஜில், "Ujjwala 3.0 New Connection" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன் பின் "Hereby Declare" என்ற பெட்டியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, "Show List" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களின் பட்டியலும் திரையில் தோன்றும். அருகிலுள்ள விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுத்து, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: புதிய பக்கத்தில் உங்கள் மொபைல் நம்பர் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 8: அதன் பின் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றி, "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 9: பிறகு விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள எரிவாயு நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும்.
எரிவாயு நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யும், நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், இலவச எரிவாயு இணைப்பை வழங்கும்.
உங்கள் பகுதியில் உள்ள எல்பிஜி எரிவாயு அலுவலகங்களுக்கு சென்று ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
இலவச எரிவாயு பெறுவதற்கான தகுதி: விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாகவும், இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 பூர்த்தி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயரில் ஏற்கனவே எந்தவித எரிவாயு இணைப்பும் இருக்கக்கூடாது.
குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் இருந்தால் 1,00,000 ரூபாய்க்கும் குறைவாகவும், நகர்ப்புறங்களில் 2,00,000 ரூபாய்க்கு குறைவாகவும் இருக்க வேண்டும். பட்டியல் சாதி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அல்லது பிற நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களும் இலவச எரிவாயு பெற தகுதியானவர்கள்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிபிஎல் ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், மொபைல் நம்பர், குடியிருப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications