சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நீதிமன்றம், பிரிட்டன் நாட்டின் பணக்கார குடும்பமும், இந்திய வம்சாவளியினரான இந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை, வீட்டு வேலை செய்யும் பணியாளர்களைத் துன்புறுத்தியதற்காக 4 முதல் 4.5 வருடங்கள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில், ஆள் கடத்தல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பணியாளர்களைச் சுரண்டல் மற்றும் அனுமதி இல்லாத வேலை வாய்ப்பை வழங்கியதற்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அடங்குவர். பிரகாஷ் இந்துஜா குடும்பம் இவர்கள் வீட்டில் பணியாற்றுவோரின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தது, சுவிஸ் நாணயமான ஃப்ராங்க்-க்கு பதிலாக இந்திய ரூபாயில் சம்பளம் வழங்கியது, பணியாளர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல தடை செய்தது, சுவிட்சர்லாந்தில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு நாள் முழுவதும் வேலை வாங்கியது, பணியாளர்களை சுரண்டல் என பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவ்வழக்கில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
பிரகாஷ் இந்துஜா வீட்டில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவில்லாத இந்தியர்கள். இவர்கள் ஜெனீவாவில் உள்ள இந்துஜா குடும்பத்தின் ஆடம்பரமான வீட்டில் வேலை செய்து வந்தனர். இந்துஜா குடும்பம் பல வருடங்களாக சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வருகின்றனர், இதனால் அந்நாட்டின் விதிமுறைகள் கட்டாயம் தெரிவித்திருக்கும். பிரகாஷ் இந்துஜா 2000ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டில் குடியுரிமை பெற்றவர்.
2007 ஆம் ஆண்டிலும் பிரகாஷ் இந்துஜா மீது இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தீர்ப்பு வழங்கப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட இந்துஜா குடும்பத்தினர் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது கூடுதல் தகவல்.
கடந்த வாரம், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்துஜா குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது தெரிய வந்தது. பிரகாஷ் இந்துஜா வீட்டில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு நாளுக்கு வெறும் 600 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது, அதுவும் இந்திய ரூபாயில் இந்த சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் சுவிஸ் அதிகாரிகள் ஒப்பந்தத்தைத் தாண்டி, ஊழியர்கள் சுரண்டல், ஆள் கடத்தல் மற்றும் சுவிஸ் தொழிலாளர் சட்டங்களை மீறிய செயலுக்காக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தான் தற்போது 4 முதல் 4.5 வருடங்கள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது ஜெனீவா நீதிமன்றம்.
இந்த வழக்கு விசாரணையில், சமையல் வேலை அல்லது வீட்டு வேலை போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்கள் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரங்கள் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தி உள்ளது கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், விடுமுறை அளிக்காமலும் வேலை வாங்கப்பட்டு உள்ளது, சுவிஸ் சட்டங்களின்படி குறைந்தபட்சம் வழங்க வேண்டிய சம்பளத்தின் பத்து மடங்கிற்கும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications