உலகளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள், அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புது நிறுவனத்தை உருவாக்கி, அதையும் மாபெரும் வெற்றிபெற்ற நிறுவனங்களாக மாற்றிய கூட்டத்தை கார்ப்ரேட் உலகில் மாஃபியா என செல்லமாக அழைக்கப்படும். அப்படி புகழ்பெற்ற டெக் மாஃபியா கூட்டம் என்றால் பேபால் மாஃபியா. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் பிளிப்கார்ட் மாஃபியா, இப்படி நிறைய இருக்கு.
இந்த வகையில் பேபால் நிறுவனத்தை வாங்கிய ஈபே நிறுவனத்தின் நிறுவனர் Pierre Omidyar-ன் குடும்ப அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருந்தது வருகிறது Omidyar Network என்னும் முதலீட்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் இந்திய கிளை தான் Omidyar Network India.

இந்த ஒமிடியர் நெட்வொர்க் இந்திய கிளையில் வெளியேறிய முக்கிய நிர்வாகிகள் குழு, தற்போது பிராணா வென்சர்ஸ் என்ற புதிய முதலீட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த வென்சர் கேப்பிடல் பண்ட் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் இருக்கும் முதலீட்டு வாயப்புகளை பயன்படுத்தி பெரும் தொகையை சம்பாதிக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.
இதேவேளையில் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் துறையில் முதலீடுகள் குவிய துவங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது பிராணா வென்சர்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.
பிராணா வென்சர்ஸை முன்னாள் ஒமிடியர் நெட்வொர்க் பார்ட்னர் பத்ரி பிள்ளைப்பக்கம் தலைமையில் இயங்கும். அமோல் வாரங்கே மற்றும் தன்மை அமர் ஆகியோரும் இந்த நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் இருக்கப்போகிறார்கள். இவ்விருவரும் முன்னதாக ஒமிடியர் நெட்வொர்க்கில் மூத்த பதவிகளை வகித்தவர்கள். ஒமிடியர் நெட்வொர்க்கின் மற்றொரு முன்னாள் கூட்டாளரான சித்தார்த் நௌட்டியல் நிறுவனத்திற்கு ஆலோசகராக இருப்பார்.
இந்திய ஸ்டார்ட்அப் துறையின் மீது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் வேளையில், இந்திய சந்தையில் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் Accel போன்ற பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் தனது முதலீட்டு அளவை அதிகரிக்க நிதி திரட்டியுள்ளன. இதேபோல் A91 பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிதாக நிதி திரட்டியுள்ளது.
ஈபே நிறுவனர் பியர் ஒமிடியர் மற்றும் அவரது மனைவி பாம் ஒமிடியர் ஆகியோரின் குடும்ப அலுவலகமான ஒமிடியர் நெட்வொர்க், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இதுவரையில் சுமார் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
எட்-டெக் யுனிகார்ன் நிறுவனமான வேதாந்து, சாஸ் தயாரிப்பாளர் விங்ரீன்ஸ், சமூக ஊடக நிறுவனமான வெர்ஸ் இன்னோவேஷன், கிவி மற்றும் எம்2பி போன்ற பின்டெக் நிறுவனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான பவுன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை ஆரம்பக்கட்டத்திலே ஆதரித்தது முதலீடு செய்துள்ளது. ஒமிடியர் நெட்வொர்க் 13 ஆண்டுகாலத்தில் சுமார் 250 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டையும் வெளியேற்றியுள்ளது.
பிராணா வென்சர்ஸ் முதலீடு இந்திய ஸ்டார்ட்அப் துறையில் புதிய முதலீட்டை அளிக்கும், அதேபோல் ஸ்டார்ட்அப் துறையில் புதிய வேலைவாய்ப்புகள், ஸ்டார்ட்அப் ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தையும் அள்ளித்தரும்.


Click it and Unblock the Notifications