டெக் உதவியுடன் யார் வேண்டுமானாலும் வாழ்வில் பெரும் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும், இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளார் 16 வயதான பிரஞ்சலி அவஸ்தி.
பிரஞ்சலி அவஸ்தி தனது AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Delv.AI மூலம் டெக் துறையில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த மியாமி டெக் வீக் நிகழ்வின் போது, பிரஞ்சலி அவஸ்தி தனது மூளையாக கருதும் Delv.AI ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய ப்ராடெக்ட்-ஐ மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

ஜனவரி 2022 இல் Delv.AI நிறுவனத்தை நிறுவியதாகவும், தோராயமாக 450,000 டாலர் அதாவது 3.7 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெற்றிகரமாக திட்டியுள்ளதாக மியாமி டெக் வீக் நிகழ்ச்சியில் தெரிவித்து, அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும், என்ஆர்ஐ-களை வியப்பில் ஆழ்த்தினார் பிரஞ்சலி அவஸ்தி.
பிரஞ்சலி அவஸ்தி உருவாக்கிய Delv.AI நிறுவனத்தில் தற்போது 10 டெக் நிபுணர்கள் பணியாற்றி வருவதாக லின்கிடுஇன் தளத்தின் மூலம் தெரிகிறது. பிரஞ்சலி அவஸ்தி இளம் வயதில் டெக் துறையில் தொழில் முனைவோராக உயர முதன்மையான இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது தனது தந்தை தான் காரணம் என்றும் கூறினார்.
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் சையின்ஸ் கல்வியை மேம்படுத்துவதில் அவரது பொறியாளர் தந்தை-க்கு ஆர்வம் அதிகமாக இருந்தது மூலம் பிரஞ்சலி அவஸ்தி-க்கு தொழில்நுட்பத்தின் மீதான ஈர்ப்பு சிறு வயதிலேயே தொற்றிக்கொண்டது. இதன் பிரஞ்சலி அவஸ்தி தனது 7 வயதிலேயே தனது கோடிங் பயணத்தை தொடங்கினார்.
பிரஞ்சலி அவஸ்தி 11 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் அமெரிக்காவின் புளோரிடா-க்கு குடிபெயர்ந்தது. அமெரிக்கா வந்த உடன் பிரஞ்சலி அவஸ்தி-க்கு பல புதிய வாய்ப்புகள் கிடைத்தது, கணினி அறிவியல் வகுப்புகள் மற்றும் போட்டி கணித வகுப்புகளை எளிதாக பெற்றார்.
இதன் வாயிலாக 13 வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பெற்ற இன்டர்ன்ஷிப், ஒரு தொழில் முனைவோர் ஆக களத்தை தயார் செய்துக் கொடுத்துள்ளது. இந்த இன்டர்ன்ஷிப் காலத்தில் பிரஞ்சலி அவஸ்தி விர்ச்சுவல் முறையில் உயர் நிலை கல்வியை படித்தார், மறுபுறம் மெஷின் லேர்னிங் என்னும் புதிய தொழில்நுட்பம் கற்பதில் மூழ்கினார்.
இந்த காலக்கட்டத்தில் தான் லாக்டவுன் வந்தது, இதே நேரத்தில் OpenAI நிறுவனம் ChatGPT-3 பீட்டா வெர்ஷனை வெளியிட்டது. இந்த AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி ஆராய்ச்சித் தரவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் சம்மரி-ஐ ஒழுங்குபடுத்துவதற்கான ஐடியா பிரஞ்சலி அவஸ்தி-க்கு வந்துள்ளது.
இதற்காக Delv.AI நிறுவனத்தை உருவாக்கி, டேட்டா எக்ஸ்டிராக்ஷன் பிராசஸ் மற்றும் டேட்டா சைலோஸ்-ஐ டிஸ்மேன்டில் செய்ய மெஷின் லேர்னிங்-ஐ பயன்படுத்தி தனது தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தினார் பிரஞ்சலி அவஸ்தி. இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்கள் தகவல்களை ஆராய பெரிய அளவில் பயன்படும்.
இந்த நிலையில் சமீபத்தில் On Deck மற்றும் Village Global ஆகிய முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து Delv.AI நிறுவனம் 12 மில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டில் அதாவது 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3.7 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டினார். இதன் வாயிலாக பிரஞ்சலி அவஸ்தி 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்திற்கு உரிமையாளராக மாறினார்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications