19 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்ட பிரசாந்த் ஜெயின்.. ஏன் ராஜினாமா?

19 ஆண்டுகளாக ஹெச்டிஎஃப்சி ஏஎம்சி நிறுவனத்தில் CIO ஆக இருந்த பிரசாந்த் ஜெயின் ராஜினாமா செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சிராக் செட்டல்வாத் ஈக்விட்டிஸ் தலைவராகவும், ஷோபித் மெஹ்ரோத்ராவை நிலையான வருமானத்தின் தலைவராகவும் நியமிக்க இந்த நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்விரு தலைவர்களும், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நவ் நீத்திடம் ரிப்போர்ட் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

என்னென்ன  நிர்வாகம்

என்னென்ன நிர்வாகம்

பிரசாந்த் ஜெயின் தனது ராஜினாமா குறித்தான பேச்சு வார்த்தையை முன்னதாக நிர்வாகத்திடம் பேசியதாக இடி நவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயின் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பிளெக்ஸி கேப் மற்றும் டாப் 100 பண்டுகளை நிர்வகிக்கிறார்.

ரூ.1 லட்சம் கோடி நிர்வாகம்

ரூ.1 லட்சம் கோடி நிர்வாகம்

1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஈக்விட்டி சொத்துகளை மேற்பார்வை செய்யும், இந்தியாவின் முதல் நிதி மேலாளராக ஜெயின் ஆனார் என்று, டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கைக்கு பின்னர் இந்த அறிவிப்பானது வந்துள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிதியை நிர்வகித்த முதல் இந்திய நிதி மேலாளர் என்ற தனித்துவமான சிறப்பை ஜெயின் பெற்றுள்ளார். 1994ல் தொடங்கப்பட்டது முதல் கொண்டே ஜெயின், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டினை நிர்வகித்து வருகின்றார்.

ஜெயின் பேட்டி

ஜெயின் பேட்டி

முன்னதாக ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயின், இந்த ஃபண்டில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தினை நிர்வகித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஜெயின் ஐஐடி கான்பூரில் பிடெக் பட்டதாரியாகவும், பெங்களூரு ஐஐஎம்மில் பிஜிடிஎம் மற்றும் அமெரிக்காவின் ஏஐஎம்ஆரில் சிஃப்ஏ முடித்தவர்.

மிகப்பெரிய நிறுவனம்

மிகப்பெரிய நிறுவனம்

ஹெச் டி எஃப் சி ஏ எம் சி நாட்டின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாகும். இது மிகப்பெரிய அளவிலான நிதியினை பராமரித்து வருகின்றது. பல்வேறு வகையான ஃபண்டுகளை நிர்வகித்து வருகின்றது. அதில் பிரசாந்த் ஜெயின் பங்கு மிக முக்கியமானது என்றும் கூறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+