ரூ.18 கோடி கடன் விவகாரம்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. நடிகை ப்ரீத்தி ஜிந்தா!

ஐபிஎல் அணியின் இணை உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான பிரீத்தி சிந்தா, தன் மேல் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் அவருடைய பெயரில் பெற்ற ரூ.18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ப்ரீத்தி ஜிந்தா தற்போது பதில் அளித்துள்ளார்.

இந்தச் சர்ச்சை எப்படி எழுந்தது?: நியூ இந்தியா கூட்டுறவு வங்கி முறைகேடுகள் குறித்து வெளியான அறிக்கையில், வங்கிக் கிளையின் மேலாளர்களின் அனுமதியே இல்லாமல் ரூ.25 கோடி மதிப்பிலான கார்ப்பரேட் கடன் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. அதாவது அந்த வங்கியில் பணி புரியும் மேலாளர்களுக்கு தெரியாமலேயே கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு கார்ப்பரேட் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.18 கோடி கடன் விவகாரம்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. நடிகை ப்ரீத்தி ஜிந்தா!

இப்படி வழங்கப்பட்ட கடன் விரைவாக வாராக் கடன் பட்டியலிலும் சேர்ந்துள்ளது .பொதுவாக கடன்களை பெற்று விட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாத நபர்களின் கடன்களை வாராக்கடன் பட்டியலில் வங்கிகள் சேர்க்கும். இவை குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடிய கடன்கள் ஆகும். நியூ இந்தியன் கூட்டுறவு வங்கியில் ரூ.25 கோடி கடனில் பல முக்கிய ஆதாரங்களின் பெயர்கள் பேசப்பட்டன. அதில் ஒருவர் தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவருக்கு 18 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்தக கடன் முறையாக திரும்பிச் செலுத்தப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரீத்தி ஜிந்தா தனது வழக்கறிஞர்கள் மூலம் சில விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பே நியூ இந்தியன் கூட்டுறவு வங்கியில் தனக்கு ஓவர் டிராப்ட் வசதி இருந்ததாகவும், 10 வருடங்களுக்கு முன்பே ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தி பெற்ற தொகையின் பாக்கியை முழுமையாக திருப்பிச் செலுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வங்கி கணக்கு அந்த சமயத்திலேயே மூடப்பட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது தனக்கு அந்த வங்கியில் எந்த கணக்கும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். வங்கியின் நிதிச் சிக்கல்களில் தான் எந்த விதத்திலும் பயனடையவில்லை என்றும், வங்கிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததோடு, வங்கி திவாலாகும் சமயத்தில் எந்தவிதமான சலுகைகளையும் தான் பெறவில்லை என்றும் ப்ரீத்தி கூறியுள்ளார்.

நியூ இந்தியன் வங்கியின் நிதிநிலை மோசமடையத் தொடங்கியதால் ரிசர்வ் பேங்க் தலையிட்டது. பொதுவாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் தான் வங்கிகள் செயல்பட வேண்டும். ஒரு வேலை ஆர்பிஐ-யின் வழிகாட்டுதல்களை மீறினால் அதற்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது வங்கியின் லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம்.

நியூ இந்தியன் கூட்டுறவு வங்கியின் விஷயத்தில் இரண்டு முக்கிய காரணங்களைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தலையிட்டது. நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் பணப்புழக்கம் குறைவாக இருந்ததால் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்க வரும் போது அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடு வங்கியின் நிர்வாகம் சரியில்லை என்ற கவலைகளும் இருந்தது.

இதனால் பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று ரிசர்வ் பேங்க் "ஆல் இன்க்ளுசிவ் டைரக்ஷன்ஸ் (AID)" என்ற உத்தரவை பிறப்பித்தது. AID என்பது ஒரு வங்கியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், புதிய கட்டுப்பாடுகளை எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த உத்தரவின் மூலம் டெபாசிட் செய்தவர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்படும். அதோடு வங்கியில் புதிய கடன்களை வழங்குவதற்கும் தடைவிதிக்கப்படும் வங்கியின் நிர்வாகக் குழுவை ரிசர்வ் வங்கி 12 மாத காலத்திற்கு ரத்து செய்தது. இதனால் நிர்வாக குழு வேறொரு நபருக்கு மாற்றி அமைக்கப்படும்.

அதோடு ரிசர்வ் வங்கி ஒரு நிர்வாகியை நியமித்து வங்கியின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவும் உத்தரவிட்டது. இவர் ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் வங்கியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார். மார்ச் 31, 2024 நிலவரப்படி, வங்கியில் ரூ.2436 கோடி நிலுவையில் உள்ள வைப்புத்தொகைகளும், ரூ.1175 கோடி முன்பணங்களும் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+