IPL 2025 போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தற்போது இந்த ஏலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அபதாலி அல்-ஜோஹர் அரங்கத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியே நடக்கும் IPL ஏலம் என்பதால் இது கூடுதல் ஸ்பெஷல்.
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க அனைத்து அணியின் உரிமையாளர்களும் தங்களுடைய படைகள் உடன் சவுதி அரேபியாவுக்கு வந்த நிலையில், பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்காகச் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்றுள்ளார். ஐபிஎல் வந்து விட்டாலே தலைவியைக் கையில் பிடிக்க முடியாது, இதேபோல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு எப்போதும் தனி இடம் இருக்கும் காரணத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முகமாகவே ப்ரீத்தி ஜிந்தா திகழ்கிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ப்ரீத்தி ஐபிஎல் ஏலத்திற்காகச் சவுதி அரேபியாவுக்கு வந்திருப்பதை மக்களுக்கும், தன்னுடைய ரசிகர்கள், தனது அணியின் ரசிகர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டா பதிவில் ஜெட்டாவின் முக்கிய இடத்தின் அழகிய வீடியோவை பகிர்ந்து தனது ஐபிஎல் ஏலம் மீதான தனது உற்சாகத்தை இந்த வீடியோ பதிவு மூலம் வெளிப்படுத்தினார். இதேபோல் ப்ரீத்தி ரசிகர்களை அணியின் ஏலம் குறித்த ஐடியா மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இதை விட முக்கியமாக ப்ரீத்தி ஜிந்தா நீண்ட காலத்திற்குப் பின்பு சமுக வலைத்தளத்திற்கு வந்துள்ளதை Done with my digital detox! என்பதையும் குறிப்பிட்டு உள்ளார். இன்று பிரபலங்கள் மட்டும் அல்லாமல் மக்களும் அதிகளவில் சமூகவலைத்தளத்தில் மூழ்கியிருக்கும் வேளையில், இதில் இருந்து இயல்பு வாழ்க்கையை வாழ அவ்வப்போது சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறுவது நல்லது என நிபுணர்கள் கூறும் வகையில் ப்ரீத்தி ஜிந்தா digital detox செய்துள்ளார்.
ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகும் விதமாக, பஞ்சாப் கிங்ஸ் அணி 4 கோடிக்கு வாங்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் மற்றும் 5.5 கோடிக்கு வாங்கப்பட்ட சஷாங்க் சிங்கைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் பஞ்சாபம் அணியில் இருக்கும் பிரப்சிம்ரன், 34 போட்டிகளில் 756 ரன்கள் குவித்துள்ளார். சஷாங்க் சிங் கடந்த சீசனில் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் 574 வீரர்கள், அதில் 208 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 318 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணிகள் தங்கள் அணியை வலுப்படுத்தும் வகையில் வீரர்களை தேர்வு செய்ய தயாராக உள்ளனர். இந்த ஏலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்டும் நிகழ்வாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications