IDBI Bank Deal: திட்டம் போட்டு வந்த பிரேம் வாட்ஸா.. கடந்த 18 மாதங்களில் என்ன நடந்தது தெரியுமா..?

ஹைதராபாத்தில் பிறந்து, சென்னையில் படித்து, கனடாவில் பெரும் தொழிலதிபராகவும், Fairfax Financial Holdings நிறுவனத்தின் நிறுவனராக இகுக்கும் வி.பிரேம் வாட்ஸா தான் தற்போது இந்திய முதலீட்டுச் சந்தையில் தலைப்பு செய்தியாக உள்ளார்.

1984 முதல் முதலீட்டுத் துறையிலும், நிதி சேவைத் துறையில் இருக்கும் பிரேம் வாட்ஸா, IDBI வங்கியின் 60.72 சதவீத பங்குகளை தலா 81 ரூபாய் விலையில் வாங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் மத்திய அரசும், எல்ஐசியும் தலா 30 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 53000 கோடி ரூபாய் பெற உள்ளது.

IDBI Bank Deal: திட்டம் போட்டு வந்த பிரேம் வாட்ஸா.. கடந்த 18 மாதங்களில் என்ன நடந்தது தெரியுமா..?

இதன் மூலம் IDBI வங்கியின் நிர்வாகத்தை மொத்தமாகக் கைப்பற்ற உள்ளது ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் நிறுவனம். பிரேம் வாட்ஸா ஏற்கனவே catholic syrian bank-ல் 40 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் நிலையில், எதற்காக மீண்டும் ஒரு வங்கியை வாங்குகிறார்..?

பிரேம் வாட்ஸா மட்டும் அல்ல கடந்த 18 மாதங்களில் இந்திய வங்கிகள் மற்றும் NBFC-யில் வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் சுமார் 1.81 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியுமா..?

Also Read

18 மாதங்களில் நடந்த மெகா டீல்கள்

ஃபேர்பேக்ஸ் - ஐடிபிஐ வங்கிக்கு ஒப்பந்தத்திற்கு முன்பு ஜியோ கிரெடிட் நிறுவனத்தில் அமெரிக்காவின் முன்னணி வங்கியான பேங்க் ஆஃப் அமெரிக்கா சுமார் 18000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

ஜப்பான் நாட்டின் MUFG - ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை கிட்டத்தட்ட 40000 கோடிக்கு வாங்கியது, எமிரேட்ஸ் NBD ஆர்பிஎல் வங்கியில் 60 சதவீத பங்குகளை வாங்கியது, ஜப்பான் SMBC யெஸ் வங்கியில் 24.22 சதவீத பங்குகளை வாங்கியது, வார்பெர்க் பின்கஸ் மற்றும் ADIA இணைந்து ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் 15 சதவீத பங்குகளை வாங்கியது, பிளாக்ஸ்டோன் பெடரல் வங்கியில் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது, பெயன் கேப்பிடல் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

IHC - சம்மான் கேப்பிடல் மத்தியிலான டீல் உடன் சேர்த்து மொத்தம் 9 ஒப்பந்தங்கள் 18 மாதங்களில் நடந்துள்ளது. இதற்காக 1,81,804 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

Recommended For You

எதற்காக இத்தகைய பெரும் முதலீடுகள் செய்யப்படுகிறது?

1. வெளிநாட்டு வங்கிகளான சிட்டி, HSBC போன்றவை இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கி விரிவாக்கம் செய்வதிற்கு முட்டி மோதினாலும் பெரு நகரங்களைத் தாண்டி வந்தது இல்லை.

இதனால் வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் புதிதாக வங்கி மற்றும் நிதி சேவையைத் துவங்குவதைக் காட்டிலும் வாங்குவது எளிது என முடிவு செய்து கடந்த சில ஆண்டிகளாகத் தொடர்ந்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது.

2. உலகில் பல நாடுகளில் கடன் வர்த்தகம் மிகவும் மந்தமாக இருக்கும் வேளையில் இந்தியாவில் கடன் வர்த்தகத்தின் வளர்ச்சி என்பது 12- 15 சதவீதம் வரையில் இருக்கிறது.

உதாரணமாக ஜப்பான் நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களான MUFG மற்றும் SMBC உள்நாட்டில் அதிகப்படியான டெபாசிட் வைத்துக்கொண்டு இருக்கும் கடன் வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் இல்லாமலும், பொருளாதார வளர்ச்சியிலும் மந்தமான வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.

இதேபோலத் தான் வளைகுடா வங்கிகளும், இந்த நிலையில் இந்தியாவில் வங்கிகளை வாங்குவது மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காக இத்தகைய பெரும் முதலீட்டைச் செய்கிறது.

3. நீண்ட காலமாக இந்திய வங்கிகளிடம் இருந்து தூரமாகவே இருந்து வந்த வெளிநாட்டு வங்கிகள் தற்போது ஆர்வமாக முதலீடு செய்ய முன்வர முக்கிய காரணம், வாராக் கடன் அளவு பெரிய அளவு குறைந்துள்ளது தான்.

உதாரணமாக 2019ல் சுமார் 30 சதவீதம் வாராக் கடன் வைத்திருந்த IDBI வங்கி தற்போது வெறும் 0.15 சதவீதம் அளவிலான NPA மட்டுமே வைத்துள்ளது. இதைவிட முக்கியமாகக் கடந்த ஆண்டு 9513 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+