கனடா நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான Fairfax Financial Holdings இந்தியாவின் IDBI வங்கியின் பெரும் பகுதி பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
இதன் மூலம் ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை தலா 81 ரூபாய் விலையில் வாங்கி இவ்வங்கியின் நிர்வாகத்தை மொத்தமாகக் கைப்பற்ற உள்ளது பிரேம் வாட்ஸா-வின் ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் நிறுவனம்.

இந்த பங்கு கைப்பற்றலுக்குப் பின்பு ஒரு சில மாதங்களில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக IDBI வங்கியை மேம்படுத்த பிரேம் வாட்ஸா மாஸ்டர் பிளான் போட்டு உள்ளார். இந்தியாவில் ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் கடந்த சில வருடங்களாக பல்வேறு வர்த்தகத்தை வாங்கி நிர்வாகம் செய்து வருகிறது.
இதில் முக்கியமாக இன்சூர்டெக் பிரிவில் இயங்கும் கோ டிஜிட் நிறுவனம் (57 சதவீத பங்குகள்), இதேபோல் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் முதலீட்டு நிறுவனமாக விளங்கும் IIFL கேப்பிடல் (30.2 சதவீத பங்குகளை கொண்டு உள்ளது, ஆனால் 51 சதவீதம் வரையிலான பங்குகளை வாங்கத் தயாராக உள்ளது).
மேலும் கத்தோலிக் சிரியன் வங்கியில் 40 சதவீத பங்குகள் என 3 நிதி சேவை நிறுவனங்களில் முதலீடு செய்து தற்போது ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்திய நிலையில் IDBI வங்கியை கைப்பற்றிய பின்பு ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் கீழ் இருக்கும் கோ டிஜிட், ஐஐஎப்எல் கேப்பிடல், கத்தோலிக் சிரியன் வங்கி ஆகிய 3 நிதி சேவை நிறுவனங்களையும், கிளை நிறுவனங்களாக இணைந்து IDBI வங்கியை ஒரு முழு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாக மாற்றும் மாஸ்டர் பிளான் போட்டு உள்ளார் பிரேம் வாட்ஸா.
இதற்காக 3 நிறுவனத்திலும் controlling stakes அதாவது நிர்வாகத்தைக் கைப்பற்றும் அளவுக்கான பங்குகளை வாங்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் கத்தோலிக் சிரியன் வங்கி, ஆர்பிஐ வங்கியின் விதிகள் படி ஒரே நிறுவனம் அல்லது ஒரே ப்ரோமோட்டார் 2 வங்கிகளுக்கான உரிமத்தை வைத்திருக்க கூடாது.
இதனால் கத்தோலிக் சிரியன் வங்கியை ஐடிபிஐ வங்கியுடன் இணைக்க வேண்டும் அல்லது கையில் இருக்கும் 40 சதவீத பங்குகளை விற்பனை செய்யப்பட வேண்டும். இவ்விரு முடிவுகளை எடுக்க ஆர்பிஐ 2 வருட கால அவகாசம் கொடுக்கும்.
2018ல் திவாலாகும் நிலையில் இருந்த கேளராவை சேர்ந்த இந்த Catholic Syrian Bankயை காப்பாற்றும் நோக்கில் ஆர்பிஐ 51 சதவீத பங்குகளை கைப்பற்ற Fairfax Financial Holdings-க்கு அனுமதி கொடுத்தது. இதன் பின்பு CSB bank என பெயர் மாற்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது மூலம் பங்கு இருப்பு 40 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

