அமெரிக்க நிறுவனத்தில் திடீர் முதலீடு.. அதிர்ச்சி கொடுத்த அசிம் பிரேம்ஜி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான அசிம் பிரேம்ஜி தொழிலதிபராக இருந்தாலும் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் அதிகளவிலான நிதியுதவிகள் செய்துள்ளார் அதிலும் குறிப்பாகக் கல்வி, சுகாதாரம் போன்ற பல விஷயங்களுக்குக் கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுத்தவர்.

சில வருடங்களுக்கு முன்பு விப்ரோ நிறுவனத்தின் நேரடி நிர்வாகப் பணியில் இருந்து வெளியேறிய அவர் நிர்வாகக் குழுவில் மட்டும் இருந்து வந்தார். இதனால் அவரைப் பற்றிய செய்திகளும், தகவல்களும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் தற்போது அசிம் பிரேம்ஜி தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார்.

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி -ன் சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் மூலம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருக்கும் அடிப்படை மருத்துவச் சேவைகளை வழங்கும் Lora Health என்னும் நிறுவனத்தில் சுமார் 126 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனத்தில் ஏற்கனவே காக்ஸ் எண்டர்பிரைசர்ஸ், டீமாசெக் எ ப்ரைம் கேப்பிடல் போன்ற பெறும் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரேம்ஜி இன்வெஸ்ட்

பிரேம்ஜி இன்வெஸ்ட்

இதுக்குறித்துப் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்தின் பார்ட்னர் தீரஜ் மல்கானி கூறுகையில், சுகாதாரத் துறையில் வாய்ப்புகளாக நீண்ட நாட்கள் காத்திருந்து பெற்றுள்ளோம் எனக் கூறியுள்ளார். இந்த Lora Health நிறுவனம் மருத்துவத் துறையில் பல புதுமைகளைச் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லமல் பல நோயாளிகளின் வாழ்க்கையை இவர்கள் மாற்றியுள்ளார். தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்தத் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கியச் சேவை

முக்கியச் சேவை

Lora Health நிறுவனத்தின் முக்கியமான சேவையே, தற்போது இருக்கும் மருத்துவச் சேவைகளை எப்படிக் குறைந்த விலையில் அதாவது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மலிவான விலையில் கொடுப்பதே ஆகும்.

 

 

டிஜிட்டல் சேவைகள்

டிஜிட்டல் சேவைகள்

அதுமட்டும் அல்லாமல் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு பல்வேறு சுகாதார விடையங்களைப் போன், குறுஞ்செய்தி, ஈமெயில் வாயிலாக மக்களுக்குக் கொடுக்கிறது. இதுமட்டும் அல்லாமல் Health Goals-ஐ அடைய தனிப்பட்ட முறையில் மக்களுக்குச் சேவையை அளிக்கிறது.

 

 

வளர்ச்சி

வளர்ச்சி

கடந்த 2 வருடத்தில் மட்டும் Lora Health நிறுவனம் சுமார் 70 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் சுமார் 48 சேவைகளை அமெரிக்க மக்களுக்குக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Premji Invest leads $126 million round in US company

Premji Invest, the investment firm of Wipro’s founder chairman Azim Premji, has led a $126 million funding in Boston-based primary care provider Iora Health. Existing investors Cox Enterprises, Temasek F-Prime Capital, Devonshire Investors, 406 Ventures, Flare Capital Partners, Polaris Partners, and Khosla Ventures participated in the round.
Story first published: Wednesday, February 12, 2020, 17:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X