அசிம் பிரேம்ஜியின் முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட், இந்தியாவின் மெத்தை மற்றும் ஸ்லீப் டெக் நிறுவனமான தி ஸ்லீப் நிறுவனத்தில் 177 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளது.
இந்த முதலீட்டு சுற்றில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள ஃபயர்சைட் வென்ச்சர்ஸ் மற்றும் அல்டெரியா கேபிடல் போன்ற நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் ஃபயர்சைட் வென்ச்சர்ஸ் மற்றும் அல்டெரியா கேபிடல் நிறுவனங்கள் தங்களது பங்கினை உயர்த்திள்ளன என்று தி ஸ்லீப் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஹர்ஷித் மற்றும் பிரியங்கா சலோட் தெரிவித்துள்ளனர்.
பல ஸ்டார்ட் அப்களில் முதலீடு
பிரேம்ஜியின் முதலீட்டு நிறுவனம் இதற்கு முன்பாக பர்பிள் (Purplle), ஐசெர்டிஸ் (Icertis), ஐடி பிரெஷ் ஃபுட்( iD Fresh food) உள்ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.
தி ஸ்லீப் நிறுவனம் தொடர்ந்து ஆன்லைனில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், டயர் 1 நகரங்களில் தேவை அதிகரித்து வருகின்றது. தனி நபர் வருமானம் அதிகரிக்கும்போது நுகர்வும் அதிகரிக்கும். இதன் காரணமாக அதிக தேவையும் இருக்கும் என கூறியுள்ளது.
தேவை அதிகரிப்பு
தற்போது தேவையானது அதிகரித்துள்ளது. ஜூலை 2021ல் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஃபயர்சைடு வென்ச்சர்ஸிடமிருந்து 13.4 கோடி ரூபாய் திரட்டியிருந்தது. இந்த சுற்றில் LogX வென்ச்சர்ஸ் மற்றும் Mamaearth-ன் இணை நிறுவனர் வருண் அலக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விரிவுபடுத்த திட்டம்
மும்பையை தலைமையிடமாக கொண்ட தி ஸ்லீப் நிறுவனம் தொடர்ந்து அதன் ஆஃப்லைன் இருப்பினையும் விரிவுபடுத்தி வருகின்றது. தற்போது திரப்பட்டும் நிதியில் பெரும் பகுதி இதற்காக பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது ஏற்கனவே மூன்று மையங்களை கொண்டுள்ளது. இது 2023ம் நிதியாண்டில் 25% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளார்கள் இடத்தில் இருக்கணும்
முதன் முறையாக டிஜிட்டல் பிராண்டாக தொடங்கினாலும் தற்போது ஆஃப்லைன் பிராண்டாகவும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நீண்டகாலத்திற்கு உங்கள் வணிகத்தினை வலுவான பிராண்டாக வலுப்படுத்த விருப்பினால், நீங்கள் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். தற்போது அதனைத் தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.
முதலீடு எதற்காக?
இந்த முதலீட்டில் ஒரு பகுதியினை உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும். இது மக்கள் தூங்கும் முறை மற்றும் உட்காரும் முறையை மாற்றுவதற்கானபெரிய இலக்கினை அடைவதற்கு முக்கியமானது என்றும் கூறியுள்ளது.
வெளிநாட்டிலும் விரிவுபடுத்த திட்டம்
தி ஸ்லீப் நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளி நாடுகளிலுல் வாடிக்கையாளர்கள் தளத்தினை வலுப்படுத்த விரும்புகின்றது. இதன் காரணமாக நாங்கள் ஒரு வலுவான பிராண்டை உருவாக்க நினைக்கிறோம். அதன் அடித்தளத்தினை மேம்படுத்த நினைக்கிறோம். சந்தைபடுத்தலில் முதலீட்டினை அதிகரிக்க விரும்புகிறோம்.
கொரோனாவுக்கு பின் 10 மடங்கு வளர்ச்சி
கடந்த 2019ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கொரோனாவுக்கு பிறகு 10 மடங்கு வளர்ச்சியினை எட்டியுள்ளது. வளர்ச்சி என்பது பெரியளவில் இருந்தாலும் சவால்களும் இருந்து கொண்டு தான் உள்ளது. இந்திய மெத்தை சந்தையின் மதிப்பு இன்ரு 12,000 - 13000 கோடி ரூபாயாகும்.
தற்போது குர்ல் ஆன், ஸ்லீப்வெல் உள்ளிட்ட பிராண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது வேக்பிட், ஸ்லீப்பிகேட், டியூரோஃப்ளெக்ஸ் மற்றும் பல பிராண்டுகளும் போட்டியினை அதிகரித்து வருகின்றன.
பாதிப்பு இல்லை
எனினும் எங்களது பிராண்ட் போட்டியால் பாதிக்கப்படவில்லை. சந்தையின் அளவு இங்கு பெரியது. ஆக எங்களால் வளர்ச்சி காண முடியும். எங்கள் பிராண்டிற்கும் சாத்தியமான வளர்ச்சி உண்டு என்று தி ஸ்லீப் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications