சென்னை: ஏப்ரல் மாதம் முதலே, கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக எஃப்எம்சிஜி(FMCG) என்று சொல்லப்படுகிற ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ் மற்றும் டெய்ரி ப்ராடக்டுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த மாதத்தில் அதிக விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
இந்த எஃப்எம்சிஜி பொருட்களான கொக்கோகோலா, ஐஸ்கிரீம், மினரல் வாட்டர், ஜூஸ் போன்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகக் கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி பொருட்களை கொண்டு சேர்க்க உற்பத்தியை இந்நிறுவனங்கள் அதிகரித்துள்ளது.

கோடை காலத்தில் மற்ற நாட்களை ஒப்பிடும்போது அதிக அளவில் குளிர்பானங்கள் மற்றும் குளிர்சாதன பொருட்களை மக்கள் வாங்குகின்றனர். இதனால் சில குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள், நுகர்வோர் விருப்பங்களை கருத்தில் கொண்டு புதிய தயாரிப்புகளை அதிகப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மேலும் இந்த மாதங்களில் அதிக அளவிலான குளிர்பானங்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக விளம்பரங்கள் மற்றும் நிறுவன விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்த மாதத்தில் அதிக அளவு மக்களுக்கு குளிர்சாதன பொருட்களை கொண்டு சேர்க்க பெப்சி, 7 அப், மிரண்டா, மவுண்டன் டியூ, ஸ்லைஸ், ட்ராபிக்கானா போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் நிறுவனம், ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தானா, ரித்திக் ரோஷன், மகேஷ் பாபு மற்றும் நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரங்கள் செய்து மக்களை கவரத் தொடங்கியுள்ளது.
எப்எம்சிஜி நிறுவனமான, டாபர் இந்தியா நிறுவனம் கோடை காலத்தை மையமாகக் கொண்டு, அதன் தயாரிப்புகளான குளிர்பானங்கள் மற்றும் குளுக்கோஸ் போன்றவைகள் இந்த கோடை காலத்தில் நல்ல விற்பனை பெற்று தரும் என எதிர்பார்க்கிறது.
இந்த சம்மர் காலத்தில், விற்பனைகளை ஊக்குவிக்கும் விதமாக, டாபர் இந்தியா லிமிடெட் ரீடைல் மற்றும் ஸ்டாக் போன்றவற்றை அதிகரிக்க இன்வெண்ட்டரி கட்ட தொடங்கியுள்ளதாக, டாபர் இந்தியா லிமிடெட் விற்பனை தலைவர் அன்சூல் குப்தா தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பந்த்நகரில், டாபர் இந்தியா குளிர்பான நிறுவனம், தனது ஆலையில் உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளது. கூடுதலாக, கோடைகால தேவைக்கு ஏற்ப குளிர்பானங்களுக்கு, இந்தூரில் புதிய ஆலையும், ஜூஸ் தயாரிக்க ஜம்முவில் புதிய ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது, என்றும் அவர் கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த கோடையில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அதிக வெப்ப அலை வீசும் என அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கோகோ கோலா நிறுவனமும் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளது.
சவுத் கொரியா மிட்டாய் நிறுவனமான லாட்டே வெல்புட் இன் ஒரு அங்கமான ஹவ்மோர் ஐஸ்கிரீம், முந்தைய ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்றும், இதனால் விற்பனை அதிகமாகலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போதுள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளோம், மேலும் ஜூலை - ஆகஸ்ட் 2024 முதல் புனேயில் உள்ள எங்கள் தொழிற்சாலை மூலம் அதிக தேவைக்கு உற்பத்தி செய்யத் தயாராக உள்ளோம் என்று ஹவ்மோர் ஐஸ்கிரீம் நிர்வாக இயக்குநர் கோமல் ஆனந்த் கூறினார். இந்த சீசனில் 12 புதிய சுவைகளில் பொருட்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications