ஊத்துக்குளி: ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தியாளர் சங்கம் அங்கு தயாரிக்கப்படும் வெண்ணைக்கு, புவியியல் குறியீடு வழங்க கோரி விண்ணப்பித்துள்ளது.
ஜியோகிராபிக் இண்டிகேஷன் (GI) எனப்படும் புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது நாட்டிலோ தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு குறியீடாகும். ஜிஐ குறியீடு என்பது, ஒரு பொருள் பாரம்பரிய முறையாக தயாரிக்கப்பட்டு, தரம் காக்கப்பட்டது என்பதற்கு சான்றாக வழங்கப்படும் குறியீடாகும்.

இந்த விண்ணப்பமானது புவிசார் குறியீடு பெறுவதில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞரான பி. சஞ்சய் காந்தியால் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கான நடைமுறை நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் ஃபோரம்மில் நடந்து வருகிறது.
மார்க்கெட்களில், பலவகையான வெண்ணை வகைகள் கிடைத்தாலும் இந்த வெண்ணை தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் பளபளப்பு தன்மை புளிப்பு சுவை ஆகிய காரணிகளால் ஊத்துக்குளி வெண்ணெய் பிற வெண்ணைகளிலிருந்து மாறுபடுகிறது. இதற்கான காரணம் அங்குள்ள மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரத்தை பொறுத்து அமைகிறது. ஊத்துக்குளி வெண்ணையானது எருமைப் பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
புவிசார் குறியீடு பெறுவதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்ப மனுவில் கூறியிருப்பதாவது, ஊத்துக்குளியில் கால்நடைகள் உள்ள வீடுகளில் இருந்து, அதிகப்படியான பால் கிடைக்கும். அதன் பிறகு அவர்கள் அந்த பாலை சூடாக்கி, தயிர் சேர்த்து, மண் பானைகளில் உறைய வைப்பார்கள். குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு தயிர் பானையாவது ஊத்துக்குளியில் வைத்திருப்பார்கள். இதனை அவர்கள் பாரம்பரியமாக கருதுகிறார்கள். மேலும் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள், இந்த தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுப்பார்கள். இது தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரியம் ஆகும். 1950 ஆம் ஆண்டு முதல் ஊத்துக்குளி வெண்ணெய் ஒரு சமையல் பொக்கிஷமாக இருக்கிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நபார்டு (MABIF) இன் தலைமை நிர்வாக அதிகாரி கே.கணேஷ் மூர்த்தி பேசும்போது, ஊத்துக்குளி வெண்ணையின் ரகசியமே, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் உன்னிப்பான பராமரிப்பு மற்றும் அதற்கு வழங்கப்படும் தீவன தரத்தை பொறுத்தது. விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு பருத்தி விதை மற்றும் கொழுக்கட்டைப்புல் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த தீவனங்களைக் கொடுத்து வளர்க்கின்றனர். இதன் விளைவாக பால் அதிக கொழுப்பு மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஊத்துக்குளி வெண்ணெய் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அந்த நகரத்தில் இருக்கும் ரயில் நிலையம். பல்வேறு இடங்களுக்கு இதனால் வெண்ணெய் திறம்பட செல்ல வசதியாக உள்ளது. மேலும், தொலைதூர சந்தைகளை அடைவதற்கும் ஏற்றதாக இருக்கிறது.
ஊத்துக்குளி வெண்ணெய்யின் முக்கியத்துவம் பற்றி 1956 ஆம் ஆண்டே, தி மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சர் இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ராமநாதபுரம் பூங்கர் அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி, கிண்டி இல் உள்ள ஜியோகிராபிகள் இன்டிகேசன் ரெஜிஸ்ட்ரி இல் விண்ணப்பித்துள்ளது. இந்த வகை நெல் ரகம் ராமநாதபுரம் தாலுக்காவில் பயிரிடப்படுகிறது. பூங்கர் அரிசி டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நவரைப் பருவத்தில் விளைகிறது. இது தமிழ்நாட்டின் ஒரு தனித்துவமான பாரம்பரிய அரிசி வகையாகும்.
புவிசார் குறியீடு வழங்கப்படுவதால், அந்த பகுதியில் உள்ள பொருள்களின் தரத்தை உறுதி செய்ய முடியும். இது மார்க்கெட்களில் கிடைக்கு சில டூப்ளிகேட் பொருள்களை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications