இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட நாடுகளில் மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவிக்கும் நிலையில், இத்தாலி நாட்டில் முக்கிய டவுன் பகுதிகளில் உலக மக்களை அப்பகுதிக்குக் குடியேறப் பணம் கொடுத்து அழைக்கப்படுகிறது.
இத்தாலி நாட்டில் Puglia என்னும் மாகாணத்தில் Presicce என்னும் டவுன் பகுதியில் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அப்படி Presicce பகுதியில் குடியேற வரும் மக்களுக்கு ஒரு வீட்டை வாங்கிக் குடியேற உள்ளூர் அரசு சுமார் 30000 யூரோ அதாவது 25.1 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Presicce கிராமம்
1991 க்கு முன் கட்டப்பட்ட வரலாற்று மையத்தில் பல காலி வீடுகள் அதிகமாக உள்ளன, அவை புதிய குடியிருப்பாளர்களுடன் மீண்டும் உயிர்ப்போடு இருப்பதைக் காண விரும்புகிறோம் என உள்ளூர் Presicce கவுன்சிலர் Alfredo Palese தெரிவித்துள்ளார்.
30000 யூரோ
வரலாறு, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் கலைகள் நிறைந்த பழைய மாவட்டங்கள் காலி செய்யப்படுவதைக் காண்பது வருத்தமளிக்கிறது Alfredo Palese தெரிவித்துள்ளார். Presicce பகுதியில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தாலும், அதிகப்படியான மக்களைக் குறைந்த காலகட்டத்தில் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த 30000 யூரோ அளிக்கப்படுகிறது.
முனிசிபாலிட்டி
2019 ஆம் ஆண்டு அருகிலுள்ள முனிசிபாலிட்டியுடன் ஒன்றிணைந்து பெரிய ப்ரெசிஸ்-அக்வாரிகா நகரமாக மாறியதால், இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தொடரும் என்பதை உறுதிப்படுத்தக் கூடுதல் பணத்தைத் தங்களுக்கு அளித்துள்ளதாக Alfredo Palese கூறுகிறார்.
அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும்
ஆனால் இதுபோன்ற நகரங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும், இன்றைய நவீன வாழ்க்கை முறைக்குத் தேவையான வசதிகள் இருக்காது என்பது தான் முக்கியப் பிரச்சனை. இன்று பலர் தொழில்நுட்பம் நகரங்களின் சத்தத்திற்கு மத்தியில் இருக்க வேண்டாம் என நினைப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்
ஸ்பெயின் - சால்டோ டி காஸ்ட்ரோ
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட ஒரு கிராமமான, சால்டோ டி காஸ்ட்ரோ (Salto de Castro), மிகவும் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சொந்தமாகப் பார், பள்ளி, தேவாலயம், விடுதி, நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளன.
44 வீடுகள்
இது போக 44 வீடுகளைக் கொண்ட ஒரு முழு ஸ்பானிஷ் கிராமம் சால்டோ டி காஸ்ட்ரோ வெறும் 2,59,000 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதே வேளையில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்-ல் 1BHK வீட்டின் விலை 2 கோடி ரூபாய்.
2,59,000 டாலர்
இந்தக் கிராமம் இதற்கு முன்பு 5 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்யப்படப் பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்தக் கிராமத்தை வாங்க யாரும் முன்வராத காரணத்தால் விலை தொடர்ந்து குறைந்து தற்போது வெறும் 2,59,000 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 BHK வீடு
ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்-ல் 1 BHK வீட்டின் விலையில் ஒரு கிராமத்தையே வாங்க முடியும் என்பது சிறப்பான விஷயமாக உள்ளது. ஆனால் இந்தக் கிராமத்தை மக்கள் வாழ்வதற்காகச் சரி செய்ய அதிகப்படியான செலவாகும். மேலும் பாதுகாப்பு மிகவும் முக்கியப் பிரச்சனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications