மத்திய அரசு பிப்.1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதன் தொடக்க நாளான புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்ற வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் அவரை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையின் போது கௌரவ காவல்படை மரியாதை(கார்ட் ஆஃப் ஆனர்) அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர், லோக்சபா அரங்கில் 18வது லோக்சபாவின் 7வது அமர்வு மற்றும் ராஜ்யசபாவின் 270வது அமர்வின் தொடக்க நாளில் இரு சபைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த உரை தான் பட்ஜெட் கூட்டத்தொடரின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியா 21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கட்டத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அடித்தளம் வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) என்ற இலக்கை அடைய வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் "சமூக நீதியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதில் எனது அரசு உறுதியாக உள்ளது" என்று வலியுறுத்தினார். 2026ஆம் ஆண்டு நாட்டின் பயணத்தில் முக்கிய அடித்தளமாக அமையும் என்று கூறினார்.
இந்திய விண்வெளி துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று கூறிய அவர், விண்வெளி வீரர் சுப்ஹான்ஷு சுக்லாவின் ISS பயணம் வரலாற்று நிகழ்வு என்றும், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். ககன்யான் திட்டம் நடைபெறுவதாகவும், விண்வெளி சுற்றுலா இந்தியர்களுக்கு கிடைக்கும் தூரத்தில் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாராட்டிய குடியரசுத் தலைவர், காமாக்யா-ஹவுரா இடையேயான புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்திய ரயில்வேயின் சாதனை என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்குவதாகவும், ரயில்வே 100% மின்மயமாக்கல் நோக்கத்தை நெருங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2.5 கோடி ஏழை நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றதாகவும், மொத்தம் 11 கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். நாடு முழுவதும் 1.80 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்கள் மூலம் மக்களுக்கு வீட்டுக்கு அருகில் சிகிச்சை கிடைப்பதாகவும் வலியுறுத்தினார்.
மேலும் நேரடி நன்மை பரிமாற்றம் (DBT) மூலம் கடந்த ஒரு ஆண்டில் ரூ.6.75 லட்சம் கோடிக்கும் மேல் நன்மைகள் நேரடியாக பயனாளிகளுக்கு சென்றுள்ளதாகவும், ஊழல் மற்றும் கசிவுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வருமான வரிச் சட்டத்தில் மாற்றம் செய்து ரூ.12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதை வரலாற்று முடிவு என்று குறிப்பிட்டார். ஜிஎஸ்டி 2.0 மூலம் ரூ.1 லட்சம் கோடி சேமிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இது இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கு புதிய வளர்ச்சியை அளிக்கும் என்றும் தெரிவித்தார். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வின் இந்த உரை பட்ஜெட் அமர்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பிப்.1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications