காஷ்மீர்: காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக வந்தே பாரத் ரயில் திட்டம் பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவைகளுக்கு மக்களிடையே சிறந்த வரவேற்பு இருக்கிறது. இதனை அடுத்து காஷ்மீரிலும் முதன்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை கொண்டு வரப்பட இருக்கிறது.

இதன்படி ஜம்மு -காத்ரா- ஸ்ரீநகர் ஆகிய மூன்று நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது. தற்போதைக்கு ஜம்மு ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் காத்ராவிலிருந்து ஸ்ரீநகர் வரை மட்டுமே முதல் கட்டமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டவுடன் இந்த பாதையில் முழுமையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் 272 கிலோமீட்டர் நீளத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்று வருவதற்காக உத்தம்ப்ய்ய்ர் -ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அது முடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். காத்ரா - பாரமுல்லா வரையிலான பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சோதனை இயக்கம் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையரும் இந்த பகுதியில் பயணம் செய்து காத்ராவிலிருந்து காஷ்மீர் வரையில் ரயில்களை இயக்க அனுமதி தந்துள்ளார் . வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையிலான பயண நேரம் கணிசமான அளவு குறைகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என அறிவித்துள்ளார். இதற்காக 19ஆம் தேதி உத்தம்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி உலகின் உயரமான ரயில்வே பாலத்தை பார்வையிட்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து விடுவார் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காத்ராவிலிருந்து வந்தே பாரத் ரயில் சேவையை அவர் கொடி அடைத்து தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு நீண்ட காலமாக ரயில் இணைப்பு வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்த வந்தே பாரத் ரயில் சேவை காஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. 1997 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீருக்கு ரயில் இணைப்பு திட்டத்தை கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் புவியியல் ரீதியாக பல்வேறு சவால்கள் இருந்ததால் அது தொடர்ந்து தாமதமாகி வந்தது. தற்போது வெற்றிகரமாக அந்த பணி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் பாதையில் 119 கிலோமீட்டர் தொலைவிற்கு 38 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் டி-49 எனப்படும் சுரங்கப்பாதை அதிகபட்சமாக 12.75 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவிலேயே சுரங்கத்தில் செல்லக்கூடிய மிக நீண்ட ரயில் பாதை என்ற பெருமை இதற்கு உண்டு. இது தவிர இந்த ரயில் பாதையில் 13 கிலோமீட்டர் தொலைவிலான 927 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications