சீனா: அமெரிக்க அரசாங்கம் இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தண்டனையாக இந்தியாவிற்கு 50 சதவீத வரி என டிரம்ப் அரசாங்கம் கூறுகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
சீனாவில் மோடி: பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக மாறி இருக்கிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மோடி சீன அதிபர் ஸீ ஜிங் பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபரை சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ஸீ ஜின் பிங் - மோடி சந்திப்பு: பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் டியான்ஜின் நகருக்கு சென்றிருக்கிறார். இரண்டு நாட்கள் அவர் சீனாவில் தங்கியிருப்பார். இதன் ஒரு பகுதியாக சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை அவர் சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா- சீனா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, எல்லை விவகாரம் இருநாட்டு உறவை மேம்படுத்துவது மற்றும் அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேச இருக்கின்றனர்.
இரு நாட்டு உறவு: மேலும் சீனா இந்தியா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் அரியவகை காந்தங்கள் ,உரங்கள்,இந்திய தொழில்துறைக்கு தேவையான உபகரணங்களை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வது குறித்தும் இதில் முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவையை கொண்டு வருவது, விசா நடைமுறைகளை பழைய நடைமுறைக்கு மாற்றுவது உள்ளிட்டவை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் முக்கியமான ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
முக்கிய கட்டத்தில் பயணம்: இரு நாட்டு உறவையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி கொண்டு செல்வார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தன்னுடைய சீன பயணம் குறித்து ஜப்பான் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா சீனா இடையிலான உறவு ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது இந்த சமயத்தில் என்னுடைய சீன பயணமும் அமைந்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
உலக பொருளாதாரம்: உலகின் இரண்டு பெரிய நாடுகள் நாடுகளான இந்தியாவும் சீனாவும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் பிராந்திய அமைதி உலக அமைதி உள்ளிட்டவற்றை நிலைநாட்ட முடியும் என்றும் அப்போது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். உலக பொருளாதாரம் பெருமளவிலான ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது இத்தகைய சூழலில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு பெரிய பொருளாதார நாடுகளும் இணைந்து செயல்படும்போது உலக பொருளாதாரத்தை ஒரு நிலைத்தன்மைக்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
விளாதிமிர் புதினுடன் சந்திப்பு: சீன அதிபர் மட்டுமில்லாமல் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும் மோடி சந்திக்க உள்ளார். அப்பொழுது உக்ரைன் விவகாரம் அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்து அவர் பேசுவார் என சொல்லப்படுகிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் தான் டிரம்ப் இந்தியாவிற்கு கூடுதல் வரி விதித்துள்ளார். எனவே மோடி புதின் சந்திப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications