டெல்லி: பிக்சட் டெபாசிட்கள் (FD) என்று சொல்லப்படுகிற நிலையான வைப்புத் தொகை, இந்தியர்கள் அனைவருக்கும் பிடித்தமான முதலீட்டு திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் பிரதமர் மோடியும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து இருக்கிறார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு என்று மொத்தமாக ரூ. 3.02 கோடி தனிநபர் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த அறிவிப்பில் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 2.86 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசி தொகுதியில் மே 14ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவருக்கு பங்குகள் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு இல்லை என்றும், 2024ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, SBI பேங்க் பிக்சட் டெபாசிட்களில் ரூ. 2.86 கோடியும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் ரூ. 9.13 லட்சமும், கையில் பண இருப்பாக ரூ. 52,920 ரூபாய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக்சட் டெபாசிட்கள் ஏன் அனைவராலும் விரும்பப்படுகிறது?: பிக்சட் டெபாசிட்கள் நம்பகமான முதலீட்டு திட்டமாக உள்ளது. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு. பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்தில் கிட்டத்தட்ட 95 சதவீதத்தை FD திட்டத்தில் வைத்திருக்கிறார்.
FD திட்டத்தின் மூலம் வருடா வருடம், நீங்கள் நிலையான வருமானம் பெற முடியும். சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு அப்பால், இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் பல முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் விதமாக உள்ளது. குறிப்பாக ஓய்வூதியம் பெறும் நாட்களை திறம்பட கழிக்க வேண்டும் என்பதற்காக பல மூத்த குடிமக்களும் FD திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
பிக்சட் டெபாசிட்களில் உள்ள இன்னொரு சிறப்பம்சம், என்னவென்றால் உங்களால் இதில் லோன் பெற முடியும். FDகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் உட்பட சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. பொது வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் FD திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் போல இல்லாமல் அபாயங்கள் குறைவாக இருப்பதால் அனைவராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக பிக்சட் டெபாசிட்கள் உள்ளன. பல்வேறு வங்கிகள் 3 முதல் 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வழங்குகின்றன.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications