இந்திய அரசு எரிபொருள் செலவுகளைக் குறைக்கவும், இதேவேளையில் பயோ எரிபொருள் பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகளில் மட்டும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல்-ஐ விற்பனை செய்ய முறையை இன்று பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.
மத்திய அரசு ஒருபக்கம் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த பெரிய அளவில் ஊக்கப்படுத்தி வரும் வேளையில் மறுபுறம் இந்தியாவின் முக்கிய இறக்குமதியாகச் செலவாக இருக்கும் எரிபொருள் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்து வருகிறது.
இதற்காக இந்தியாவில் கடந்த சில வருடங்களாகப் பெட்ரோலில் பியோ பியூயல் ஆக விளங்கும் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. தற்போது 20 சதவீதம் வரையிலான எத்தனால் கலந்த பெட்ரோல் முதல் முறையாக மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
எத்தனால் கலந்த பெட்ரோல்-ஐ பயன்படுத்துவது மூலம் எமிஷன்-ஐ குறைப்பதையும், வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதையும் குறைக்க முடியும். இதனால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு பல வருடங்களாகத் திட்டமிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
20 சதவீதம் எத்தனால்
தற்போது, இந்திய ரீடைல் சந்தையில் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுவதாகவும், 2025க்குள் எத்தனாலின் அளவை இரட்டிப்பாக்க அதாவது 20 சதவீதம் வரையில் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பெட்ரோலிய துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
நரேந்திர மோடி
பெங்களூரில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலின் விற்பனையை அறிமுகம் செய்த பிரதமர் மோடி, 2014ல் பெட்ரோலில் 1.5 சதவீதமாக இருந்த எத்தனாலின் பயன்பாடு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுத் தற்போது 20 சதவீதமாக முன்னேறி வருவதாகக் கூறினார் மோடி.
15 நகரங்கள்
20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் முதல் கட்டமாக இந்தியாவில் 15 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை நாட்டில் உள்ள அனைத்துப் பம்புகளில் விற்பனை செய்ய விரிவுபடுத்தப்படும்.
ரூ.54,894 கோடி மிச்சம்
இந்த மாற்றத்தின் வாயிலாக இந்தியாவில் எரிபொருள் இறக்குமதியை 10 சதவீதம் குறைத்ததன் மூலம் இந்திய அரசு சுமார் 54,894 கோடி ரூபாயை மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது எத்தனால்-20 (பெட்ரோல் 20 சதவீதம் எத்தனால்) 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 84 பெட்ரோல் பம்புகளில் கிடைக்கும்.
ஹர்தீப் சிங் பூரி
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூன் 2022 இல் ஐந்து மாதங்களுக்கு முன்பு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனாலைக் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது என்றும், தற்போது 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல்-ஐ நாடு முழுவதும் பைலட் அடிப்படையில் டெலிவரி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications