இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி-யின் புகழ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனாலேயே பிரதமர் நரேந்திர மோடி மீது எப்போதும் மீடியா வெளிச்சம் இருந்துக்கொண்டே உள்ளது.
ஆனால் மோடி குடும்பம் குறித்தும் அவர்களுடைய வாழ்க்கையை குறித்த தகவல்கள் அதிகளவில் வெளிச்சத்திற்கு வராமல் மிகவும் பர்சனலாகவே உள்ளது. 2024 ஆம் ஆண்டு பொது தேர்தல் நெருங்கும் வேளையில் மோடி மீண்டும் பிரதமர் பதவியில் போட்டிப்போடுவாரா, மோடி மீண்டும் அட்சியை பிடிப்பாரா என்ற பல கேள்விகள் அவரை சுற்றி வருகிறது.
பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார். இந்த தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் - சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால் மோடி மற்றும் அம்ருத் மோடி, அவர்களில் நரேந்திர மோடி மூன்றாவதாக பிறந்தவர்.

சோமா மோடி: ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரியான சோமா மோடி இப்போது அகமதாபாத் நகரில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.

பங்கஜ் மோடி: பிரதமர் மோடி உடன் பிறந்தவர்களில் இளையவர் பங்கஜ் மோடி. குஜராத் மாநிலத்தின் தகவல் துறையில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவர்களின் தாயார் ஹீராபென் காந்திநகரில் இவருடன் தான் தங்கியிருந்தார்.

அம்ருத் மோடி: ஒரு தனியார் நிறுவனத்தில் ஃபிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அம்ருத் மோடி. இவர் மாதம் ரூ.10,000க்கும் குறைவான சம்பளம் வாங்குகிறார். அவர் மகன் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனது அகமதாபாத் வீட்டில் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார்.

பிரஹலாத் மோடி: இவர் நியாய விலைக் கடை உரிமையாளர் மற்றும் குஜராத் மாநில நியாய விலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர். பிரகலாத் மோடி, தனது சகோதரர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக பல முறை எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications