இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை.. கொள்கைகள் தெளிவானவை.. பிரதமர் மோடி.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ET உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில கலந்து கொண்ட பிரதமர் மோடி, உலக பொருளாதாரம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது.

 

ஆனால் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை. மேலும் கொள்கைகள் தெளிவாக உள்ளன.

அவை கிட்டதட்ட பொருளாதாரத்தின் இலக்கை இரட்டிபாக்கும். 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார்.

உத்தரவாதமின்றி கடன்

உத்தரவாதமின்றி கடன்

மேலும் இந்தியா ஒரு நிலையான மாதிரியை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார். முத்ரா திட்டத்தின் கீழ் முதன் முறையாக தொழில் முனைவோருக்கு வங்கி உத்தரவாதமின்றி 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் துறைக்கு பொருளாதாரத்தின் கூடுதல் துறைகளை அரசாங்கம் திறந்து வைக்கிறது என்றும் மோடி கூறியுள்ளார்.

முதலீடுகள் அதிகரிப்பு

முதலீடுகள் அதிகரிப்பு

மேலும் எளிமைப்படுத்துதல், பகுத்தறிவும் மற்றும் வெளிப்படைதன்மை ஆகியவை வங்கி, அன்னிய நேரடி முதலீடு, அல்லது இயற்கை வள திறப்பதற்கான ஒதுக்கீடுகளாகும். 2019ம் ஆண்டில் இந்தியாவுக்கு 48 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்தது. இது 16% வளர்ச்சியாகும்.இதே போல் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன முதலீடு 53% வளர்ச்சியைக் கண்டு 19 பில்லியன் அமெரிக்கா டாலர்களைக் கண்டுள்ளது.

அனைவரும் நண்பர்கள்
 

அனைவரும் நண்பர்கள்

நாங்கள் ஒரே நேரத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈரானின் நண்பர்கள். அதே நேரத்தில் அமெரிக்கா ரஷ்யாவுடனும் நண்பர்களாக இருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒர் நிகழ்வில் சவுதி அரேபிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன என்று கூறியது கவனிக்கதக்கது.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்தியாவின் வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள இந்த நிலையில், அடுத்து வரும் நிதியாண்டில் இருக்கும் வளர்ச்சியாவது இருக்குமா? இல்லை என்ற சந்தேகத்தின் மத்தியில், தற்போது கொரோனா வைரஸூம் சேர்ந்து கொண்டுள்ளது. இன்னும் எவ்வவெல்லாம் இந்திய பொருளாதாரத்தினை செய்யப் போகிறதோ என்ற எண்ணத்தின் மத்தியில், பிரதமர் மோடியின் வார்த்தைகள் சற்று நம்பிக்கையை தரும் விதமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Prime minister narendra modi said fundamentals of Indian economy strong, policies are clear

PM Narendra modi said global economy in a difficult phase, but fundamentals of Indian economy strong. Also policies are clear. So that will aid a reach of economic target.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X