மன்னர் சார்லஸ்-க்கு பிரிட்டன் அரசு கொடுக்கும் 40% வரி சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் நாட்டின் ராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் 96 வயதில் காலமானார். வெறும் 21 வயதில் பல அசைகளை விடுத்து பிரிட்டன் நாட்டின் ராணியாக 1952 ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

 

இவரது மரணம் பிரிட்டன் நாட்டைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எலிசபெத் ராணியின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டன் மன்னராகச் சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பிரிட்டன் அரசு குடும்ப நிறுவனம், சொத்துக்கள், அரண்மனைகள் தற்போது இவர் கையில் வர உள்ளது.

இதற்கிடையில் பிரிட்டன் அரசு மன்னர் சார்லஸ்-க்கு முக்கியமான சலுகையை வழங்க உள்ளது,

சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..! சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..!

500 மில்லியன் டாலர் சொத்து

500 மில்லியன் டாலர் சொத்து

ராணி எலிசபெத் தனது முதலீடுகள், கலை சேகரிப்பு, நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ஆகியவற்றின் மூலம் சுமார் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார். அவரது மறைவிற்குப் பின்பு இளவரசர் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில் பெரும்பாலான சொத்துக்கள் அவருக்குக் கொடுக்கப்படும்.

ராணி எலிசபெத்-ன் தாயார்

ராணி எலிசபெத்-ன் தாயார்

ராணி எலிசபெத் அவர்களின் தாயார் 2002 இல் இறந்தபோது அவரது 70 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை எலிசபெத் பெற்றார், இதில் ஓவியங்கள், முத்திரைத்தாள் சேகரிப்பு, நகைகள், குதிரைகள் மற்றும் மதிப்புமிக்க ஃபேபர்ஜ் முட்டை கலெக்ஷன் ஆகியவை அடங்கும்.

வாரிசு வரி
 

வாரிசு வரி

ராணி எலிசபெத் தனது தாயார் விட்டுச் சென்ற சொத்துக்களைக் கைப்பற்ற வாரிசு வரி அதாவது inheritance tax செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க, பிரிட்டன் நாட்டின் அரசு அமைப்பில் ஒரு சிறப்புச் சட்டப் பிரிவு உள்ளது. இந்த விதி இளவரசர் சார்லஸ்-க்கும் பொருந்தும்.

40% வாரிசு வரி

40% வாரிசு வரி

1993 இல் முன்னாள் பிரதமர் ஜான் மேஜருடன் அரச குடும்பத்தின் செல்வம் குறைவதைத் தடுக்க ஒரு அரசரிடம் இருந்து மற்றொரு அரசருக்குச் சொத்துக்களை மாற்றும் போது வாரிசு அடிப்படையில் 40% வாரிசு வரி அதாவது inheritance tax செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 இளவரசர் சார்லஸ்

இளவரசர் சார்லஸ்

இதன் மூலம் இளவரசர் சார்லஸ் 28 பில்லியன் டாலர் சாம்ராஜ்யமான Monarchy PLC-ஐ நேரடியாக வரி இல்லாமல் பெறமாட்டார். இந்த வரிச் சலுகை என்பது இரண்டாம் எலிசபெத் ராணியின் பர்சனல் சொத்துக்களாக இருக்கும் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே சார்லஸ் 40 சதவீத வரி விலக்கில் பெறுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Prince Charles get 40 percent inheritance tax exemption to acquire Queen Elizabeth II $500 million fortune

Prince Charles get 40 percent inheritance tax exemption to acquire Queen Elizabeth II $500 million fortune
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X