இளவரசி டயானாவுக்காக பிரத்யேகமாக கருப்பு வண்ணம் பூசப்பட்ட கார் ஏலத்தில் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து இளவரசி டயானாவின் கறுப்பு நிற கார் அவர் மறைந்த 25 ஆண்டுகள் கழித்து தற்போது ஏலம் விடப்பட்டு உள்ளது.
இந்த சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாகவும் ஏலம் எடுத்தவரின் பெயரை ஏல நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளவரசி டயானாவின்
இளவரசி டயானாவின் கருப்பு நிற ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ கார் ரூ.6,09,38,283க்கு ஏலத்தில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, தனித்துவம் வாய்ந்த இந்த கருப்பு ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ காரில் கடந்த 1980 களில் இளவரசி டயானா பயன்படுத்தினார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1988ஆம் ஆண்டு மே வரை இளவரசி டயானா இந்த காரை பயன்படுத்தினார்.
ஏலத்தில் விற்பனை
இந்த நிலையில் இளவரசி டயானா மறைந்து நாளை மறுநாளுடன் 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட் என்ற ஏல நிறுவனத்தின் மூலம் டயானாவின் கார் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டயானாவின் கடைசி கார்
சில்வர்ஸ்டோன் ஏல நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி இந்த கார் 24,961 மைல்கள் ஓடியுள்ளது. இளவரசி டயானா பயன்படுத்திய கடைசி கார் இதுதான் என்பதும், இந்த காரில் இளவரசி அடிக்கடி செல்சியா மற்றும் கென்சிங்டனை சுற்றி காரை வருவார் என்றும் கூறப்படுகிறது.
ஏலம் எடுத்தது யார்
இந்த காரை ஏலத்தில் எடுத்தது யார் என்று சில்வர்ஸ்டோன் ஏல நிறுவனம் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஏலம் எடுத்தது பிரிட்டனை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
ஒரே கார்
இளவரசியின் இந்த கார் மட்டுமே கருப்பு வண்ணத்தில் உள்ளது. பொதுவாக ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 வழக்கமாக வெள்ளை நிறத்தில் தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் அரச குடும்பத்தினர் கேட்டு கொண்டதாலும், டயானாவின் விருப்பத்திற்கு இணங்கவும் கருப்பு வண்ணம் பூசப்பட்டதால் ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 மாடலில் கருப்பு வண்ணம் பூசப்பட்டது இந்த ஒரே ஒரு கார் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார் விபத்து
இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 36 வயதில் விபத்து ஒன்றில் காலமானார். பாப்பராசிகள் மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்றபோது, அவர் பயணித்த லிமோசின் கார் ஒரு பாரிஸ் சுரங்கப்பாதையில் விபத்துக்குள்ளானதால் அவரது உயிர் பிரிந்தது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications