இங்கிலாந்து அரசர் சார்லஸ்-ன் முதல் மனைவியான டயானாவின் புகழுக்கு இன்றும் குறையாமல் உள்ளது. அதிலும் குறிப்பாகச் சமுக வலைத்தளத்தில் டயானா குறித்தும் வரும் ஒவ்வொரு பதிவும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் மிகையில்லை.
அதிலும் முக்கியமாக இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பின்பும், அரசராகச் சார்லஸ் அறிவிக்கப்பட்ட பின்னரும் டயானா குறித்துப் பதிவுகள், வீடியோக்கள் எக்கச்சக்கமாக வலம் வருகிறது.
டயானா அரசு குடும்பத்தைச் சார்ந்தவர் அல்லாத காரணத்தால் மக்களிடம் மிகவும் நெருங்கிப் பழகிய காரணத்தால் மக்களுக்கு டயானா மீது தனிப் பாசம் இருக்கிறது.
இளவரசி டயானா
இவருடைய மரணம் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் வேளையில் இளவரசி டயானா-வின் ஆடை பெரும் தொகைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் டயானாவின் புகழ் மீண்டும் காட்டுத்தீ போலப் பரவியுள்ளது.
டயானாவின் வெல்வெட் கவுன்
இளவரசி டயானாவின் ஊதா நிற வெல்வெட் கவுன்-ஐ பிரபல ஏல நிறுவனமான Sotheby's தனது ஏலத்தில் சுமார் 6,00,000 டாலருக்கு மேலான மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் ஆராம்ப விலையைக் காட்டிலும் சுமார் ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4.9 கோடி ரூபாய்.
போர்ப்ஸ்
போர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, இதுவரை ஏலம் விடப்பட்ட டயானாவின் முக்கியமான ஆடைகளில் இந்த ஊதா நிற வெல்வெட் கவுன் தான் விலை உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளது.
பேஷன் ஐகான்
வரலாற்றில் மிகவும் பிரபலமான பேஷன் ஐகான்களில் மிகவும் முக்கியமான ஒருவர் இளவரசி டயானா. இவர் இந்த ஊதா நிற வெல்வெட் கவுன் 1997 ஆம் ஆண்டுப் புகழ்பெற்ற வேனிட்டி ஃபேர் போட்டோஷூட்டிலும், 1991 இல் இளவரசி மார்கரெட்டின் கணவர் லார்ட் ஸ்னோடனால் எடுக்கப்பட்ட அரச உருவப்படத்திலும் கவுன் அணிந்திருந்தார்.
விக்டர் எடெல்ஸ்டீன்
இந்த ஸ்ட்ராப்லெஸ் பால் கவுன்-ஐ பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர் விக்டர் எடெல்ஸ்டீன் 1989 Autumn collection-னில் ஒரு பகுதியாக வெளியானது குறிப்பிடத்தக்கது. கத்தரிக்காய் பூ நிறத்தில் ஒரு டுலிப் மலர் போன்ற கவுனாக இது தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஆடை வடிவமைப்பாளர்
இந்தக் கவுன் விக்டர் எடெல்ஸ்டீன் குறிப்பாக டயானாவுக்காகப் பிரத்தியேகமாகச் செய்யப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுவதால் கூடுதல் சிறப்பு வாய்ந்தாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விக்டர் எடெல்ஸ்டீன் 10 வருடத்திற்கு மேலாக டயானாவின் ஆடை வடிவமைப்பாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications