பொதுவாக அரசு திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில், ஆனால் இன்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தனியார் வங்கிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
புதன்கிழமை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அரசு வர்த்தகத்தில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி தனியார் வங்கிகள் அனைத்தும் அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
தனியார் வங்கிகளுக்கு வாய்ப்பு
இதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட அனைத்து வங்கிகளுக்கும் சமமான வாய்ப்புகளைப் பெறும், இதன் மூலம் வாடிக்கையாளர் சேவையின் தரமும் பெரிய அளவில் உயரும் எனத் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஸ் வங்கி
இதற்கு முன்பு ஆக்சிஸ் வங்கி போன்ற சில வங்கிகளுக்கு மட்டுமே அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தனியார் வங்கிகளும் ஈடுபட முடியும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளும் ஈடுபட முடியும் எனக் கூறப்படுகிறது.
உதய் கோட்டாக்
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் கூறுகையில், மத்திய நிதியமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது மிகவும் முற்போக்கான சீர்திருத்தம். இதன் மூலம் தனியார் வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான பங்குகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி பங்குகள் உயர்வு
இந்த அறிவிப்பின் எதிரொலியாக இன்று ஹெச்டிஎப்சி வங்கி 5 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 4.6 சதவீதமும், ஆர்பஎல் வங்கி 4.38 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 4.1 சதவீதமும், பெடரல் வங்கி 4.06 சதவீதமும், கோட்டாக் மஹிந்திரா வங்கி 2.18 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கி 2.04 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications