இந்தியாவில் ஆன்லைன் பேங்கிங் அதிகம் பிரபலமடைவதற்கு முன்பே, பேமெண்ட் சேவைகள் அதிகம் பிரபலமடைந்துவிட்டன எனலாம்.
காரணம், இந்தியாவில் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற பேமெண்ட் அப்ளிகேஷன்கள், அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டன.
இந்த பேமெண்ட் அப்ளிகேஷன்கள் இத்தனை பிரபலமாக, அடிப்படைக் காரணம் யூபிஐ என்று அழைக்கப்படும் Unified Payments Interface (UPI) வசதி தான். இப்போது இந்த யூ பி ஐ பணப் பரிமாற்ற முறைக்கும் கட்டணம் வசூலிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
2.5 - 5.0 ரூபாய் கட்டணம்
பல தனியார் வங்கிகள், ஒரு மாதத்தில் 20 முறைக்கு மேல், யூ பி ஐ வழியாக, P2P (ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு) பணப் பரிமாற்றங்களை (Transaction) செய்தால், 2.5 ரூபாய் முதல் 5.0 ரூபாய் வரை கட்டணம் அறிமுகப்படுத்தி இருப்பதாக, எகனாமிக் டைம்ஸ் வலை தளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அந்த தனியார் வங்கிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை.
20 முறை மட்டுமே
ஆக, இந்த கட்டணங்களை அறிமுகப்படுத்தி இருக்கும் தனியார் வங்கிகளில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், யூ பி ஐ பயன்படுத்தி, ஒரு மாதத்துக்கு 20 முறை மட்டுமே பி2பி பரிவர்த்தனைகளை (Transaction) மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு யூ பி ஐ பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஆசிஷ் தாஸ் அறிக்கை
மும்பை ஐஐடியைச் சேர்ந்த ஆசிஷ் தாஸ் என்பவர், யூ பி ஐ பணப் பரிமாற்றங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், வங்கிகள் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பொருள்படுத்திக் கொள்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார். Payment and Settlement Systems சட்டம் 2007 என்ன சொல்கிறது எனவும் விளக்கி இருக்கிறார் ஆசிஷ் தாஸ்.
PSS சட்டம் சொல்வது என்ன
பேமெண்ட் & செட்டில்மெண்ட் சிஸ்டம் சட்டம் 2007, பிரிவு 10A-ன் படி "எந்த ஒரு வங்கியோ அல்லது பேமெண்ட் சிஸ்டம்களை வழங்கும் கம்பெனியோ, வருமான வரிச் சட்டம் 269 SU பிரிவின் கீழ் குறிப்பிட்டு இருக்கும் எலெக்ட்ரானிக் பேமெண்ட் மோட் வழியாக செய்யும் பேமெண்ட்களுக்கு, எந்த ஒரு கட்டணத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பேமெண்ட் செய்பவர்கள் அல்லது பேமெண்டை பெறுபவர்கள் மீது விதிக்ககூடாது" என்கிறது.
பேமெண்ட் Vs பணப் பரிமாற்றம்
Payment, Transaction என்கிற இரண்டு வார்த்தைகளை தங்களுக்கு சாதகமாக பொருள்படுத்திக் கொண்டு, வங்கிகள், கட்டணங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அரசு தரப்பில் பேமெண்ட்கள் (Payment) இலவசம் என்கிறார்கள். எனவே வங்கிகள், பேமெண்ட்களை விட்டுவிட்டு, பணப் பரிமாற்றங்களுக்கு (Transaction) கட்டணங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மாதம் 20 யூ பி ஐ பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் கிடையாது எனச் சொன்னது, அனாவசியமான பணப் பரிமாற்றங்களை குறைத்து, யூபிஐ சிஸ்டத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கத் தான் என வங்கித் தரப்பில் சொல்கிறார்களாம்.
என் பி சி ஐ சம்மதம்
கடந்த 14 பிப்ரவரி 2020 அன்று, வங்கிகள் மற்றும் என் பி சி ஐ உடனான சந்த்திப்பின் போது தான், மாதம் 20 யூ பி ஐ பணப் பரிமாற்றங்களை இலவசமாக கொடுப்பது குறித்து முடிவு எடுத்ததாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், என் பி சி ஐ தரப்பு, மாதம் 20 யூ பி ஐ பணப் பரிமாற்றங்களுக்கு மேல் வங்கிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்கிறார் ஆசிஷ் தாஸ்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications