தற்போது சிறு கடன்களை வாங்க வேண்டும் என்றாலும் அதற்காக நாம் வங்கிகளுக்கோ அல்லது நிதி நிறுவனங்களுக்கோ செல்ல வேண்டி இருக்கிறது. இனி அந்த பிரச்சினை இருக்காது. ஏனெனில் யுபிஐ செயலிகள் வாயிலாக கடன் வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் வங்கிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியாவில் தற்போது யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது . அந்த வகையில் யுபிஐ செயலிகள் வாயிலாக கடன்களை வழங்குவது செலவு குறைந்த மற்றும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை சென்று சேரக்கூடிய ஒரு நடைமுறையாக இருக்கும் என தனியார் வங்கிகள் முடிவெடுத்துள்ளன.

இதன்படி ஃபிக்சட் டெபாசிட்டை உத்திரவாதமாகக் கொண்டு யுபிஐ செயலிகள் வாயிலாக கடன்களை வழங்குவதற்கான நடைமுறைகளை தனியார் வங்கிகள் துவங்கியுள்ளன. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இதுவரை யுபிஐ சேவை வழியாக தனியார் வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறையை தொடங்கவில்லை என்றாலும் வங்கிகள் தங்கள் கட்டமைப்புகளில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிவிட்டன.
இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வரும்போது புதிதாக வங்கிகளை நோக்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கிரெடிட் ஹிஸ்டரி அதாவது கடன் வரலாறு இல்லாமலேயே ஃபிக்ஸடு டெபாசிட் போன்றவற்றை அடமானங்களாக எடுத்துக் கொண்டு சிறிய அளவிலான கடன்களை யுபிஐ வாயிலாக வங்கிகள் வழங்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஃபிக்ஸடு டெபாசிட்களுக்கு எதிரான கடன் அளவு 1,294 கோடி ரூபாயாக இருக்கிறது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 797 கோடி ரூபாயாக இருந்தது.
அதாவது வாடிக்கையாளரின் டெபாசிட்டுகளை அடமானமாகக் கொண்டு வங்கிகள் கடன்களை வழங்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தி இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. பொதுவாக கடன் வரலாறு இல்லாத புதிய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. எனவே அவர்களை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அனுப்புகின்றன. அங்கே அவர்கள் கடன் பெறும் போது அவர்களின் கடன் வரலாறு என்பது நிறுவப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ், இந்த நடைமுறை நன்றாக வேலை செய்யும் பட்சத்தில் வங்கிகள் ஃபின் டெக் வாயிலாக கடன் அட்டைகளை விற்கலாம். அதனை தனிநபர் கடன்கள், வாகன கடன்கள் மற்றும் பலவற்றுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். இவ்வாறு கடன்களை வழங்கும்போது வங்கிகள் சார்பில் செய்ய வேண்டிய செலவினங்கள் குறைகின்றன. சில வங்கியில் இதற்காக பின்டெக் அல்லது வங்கி நிதி சார் வங்கி சாராத நிதி நிறுவனங்களோடு இணைந்து செயல்படலாம் என சொல்லப்படுகிறது.
அதாவது இந்த கடன்களுக்கான உத்திரவாதங்களை வங்கிகளை அளிக்கும் ஆனால் கடன்களை விநியோகிக்கும் செயல்முறைகளை ஃபின்டெக் நிறுவனங்கள் மேற்கொள்ளும். தற்போது வங்கிகள் மட்டுமே யுபிஐ மூலம் கடன் வழங்க முடியும். ஃபின்டெக் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களும் இதில் களமிறங்க திட்டமிட்டுள்ளன ஆனால் வங்கி தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications