நாக்பூர்: வட இந்திய திண்பண்டங்கள் என்றாலே நமது நினைவுக்கு வருவது ஹல்திராம்ஸ் தான். இந்நிறுவனத்தின் திண்பண்டங்களை சுவைக்காதவர்களே கிடையாது. தற்போது இதனை கைப்பற்றுவதற்கு இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனங்கள் கூட கடும் போட்டி போடுகின்றன.
1937ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஹல்திராம் என அன்புடன் அழைக்கப்பட்ட கங்கா பிஷான் அகர்வால் அவர்களால் தொடங்கப்பட்டது ஹல்திராம் இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்களை விற்பனை செய்யும் கடை.

இது தற்போது இந்தியாவின் முன்னணி திண்பண்ட நிறுவனமாக மாறி இருக்கிறது. தற்போது தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் ஹல்திராமின் பெரும்பகுதி பங்குகளை வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் இந்த 51% பங்குகளை வாங்குவதாக தகவல் வெளியானது.
பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களான பிளாக் ஸ்டோன் (Blackstone Inc), டெமாசெக் ஹோல்டிங்ஸ் (Temasek Holdings Ltd) மற்றும் பெயின் கேபிட்டல் (Bain Capital Lp) ஆகிய நிறுவனங்கள் ஹல்திராம் நிறுவனத்தில் 51% பங்குகளை வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
51% பங்குகளின் மதிப்பு 8 முதல் 10 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் மூன்று நிறுவனங்களிம் அதனை வழங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ரூபாய் மதிப்பில் இது 66,979 கோடி முதல் 83,490 கோடி ரூபாயாகும்.
இந்த வர்த்தகம் நடைபெற்றால் இந்தியாவிலேயே வாடிக்கையாளர் பிரிவில் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் கையகப்படுத்தும் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கும். நாக்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஹல்திராம் ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டின் 2022ஆம் ஆண்டு வருமானம் 3,622 கோடி ரூபாய். அதன் துணை நிறுவனமான ஹல்திராம் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் 5,248 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக இரண்டு நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 8,000 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது.
ஏற்கனவே டாடா குழுமம் ஹல்திராம்ஸில் கணிசமான பங்குகளை வாங்கி கையகப்படுத்துவதற்கு தயாராக இருந்தது.அப்போது ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் மதிப்பானது 83,126 கோடியாக இருந்தது.இந்த நிலையில் ஹல்திராம்ஸ் குழுமத்தை கட்டுக்குள் கொண்டுவர டாடா குழுமம் சுமார் 42,500 கோடி செலுத்த வேண்டி இருந்தது ஆனால் அந்த சமயத்தில் டாடா குழுமம் அதற்கு தயாராக இல்லாததால் அந்த வாய்ப்பு நழுவி போனது.
1937 ஆம் ஆண்டு தின்பண்டங்கள் விற்பனை தொடங்கிய ஹல்திராம்ஸ் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் தவிர்க்க முடியாத ஒரு திண்பண்ட நிறுவனமாக மாறி உள்ளது.
story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications