தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது, இனிப்புகளை வழங்குவது, பரிசுகளை வழங்குவது என பிஸியாக இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் எங்கும் நிறுவனங்கள் வழங்கிய கிப்ட் பாக்ஸ்களை பலரும் பகிர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை தீபாவளிக்கான போனஸ் தொகையாக வழங்கும். சில நிறுவனங்கள் போனஸ் தொகையோடு சேர்ந்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக விடுமுறையோடு சேர்த்து இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களையும் வழங்கி ஊழியர்களை மகிழ்விக்கும்.

அப்படி ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய கிப்ட் பாக்ஸ் சமூக வலைத்தளங்கள் என்றும் ஆக்கிரமித்து இருக்கிறது. Naukri போன்ற தளங்களை நடத்தி வரக்கூடிய info edge நிறுவனம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியிருக்கிறது . ஊழியர்கள் இதனை instagram பக்கத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய ஒவ்வொரு ஊழியருக்கும் விஐபி சூட்கேஸ் மற்றும் ஒரு பெட்டி நிறைய தின்பண்டங்களும், விளக்குகளும் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை பல்வேறு ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் ஆன முறையில் இந்த தீபாவளி பரிசினை நிறுவனம் வழங்கியிருக்கிறது.
ஊழியர்கள் டெஸ்கில் விஐபி சூட்கேஸ் மற்றும் தின்பண்டங்கள் பெட்டி மற்றும் ஒரு விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்டு அவர்களின் சம்பந்தப்பட்ட இருக்கைகளில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. காலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த ஊழியர்கள் இவற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தாங்கள் அலுவலகத்திற்கு சென்று சர்ப்பிரைசாக இந்த தீபாவளி கிஃப்ட்டை பார்ப்பது அதற்குள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்ப்பது என்பன உள்ளிட்ட வீடியோக்களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே நிறுவனம் ஊழியர்களுக்கு ஏர் ஃபிரையரை பரிசாக வழங்கியது. இந்த முறை விஐபி சூட்கேஸ்களை பரிசாக கொடுத்திருக்கிறது. பல ஊழியர்களும் இந்த தீபாவளி பரிசினை எதிர்பார்க்கவில்லை என மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பலரும் இப்படி ஒரு நிறுவனத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.
தீபாவளி என்பது நாடு முழுவதும் அனைவருக் உற்சாகம் பொங்க கொண்டாடும் ஒரு பண்டிகை. அரசு தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளிக்காக போனஸ் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு போனஸ், பரிசு உள்ளிட்டவற்றை கொடுத்து அசத்துகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் போனஸ் கூட வழங்குவதில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications