பிரியங்கா சோப்ரா-வுக்கு இப்படியொரு தம்பியா.. பெரிய பிஸ்னஸ்மேனாம்..!!

நடிகை நீலம் உபாத்யாயாவுக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி சோப்ரா குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸ், மகள் மால்தி மேரியுடன் சேர்ந்து சகோதரருடன் அழகாக படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா-வுக்கு இப்படியொரு தம்பியா..  பெரிய பிஸ்னஸ்மேனாம்..!!

Chef: பிரியங்காவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா ஒரு செஃப்பாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். புணேயில் அவர் சொந்தமாக ஒரு ரெஸ்டாரண்ட் வைத்துள்ளார். சித்தார்த் சோப்ரா அவரது பன்முகக் கலைத்திறனுக்கு பெயர் பெற்றவர்.

ஹோட்டல்: ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள பிரபல லெஸ் ரோச்சஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பட்டப்படிப்பை அவர் முடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் அவர் புணேயில் உள்ள கோரேகான் பார்க்கில் மக்ஷாட் லவுஞ்ச் என்ற ரெஸ்ட்டாரன்ட்டைத் தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு வரை அது செயல்பட்டு வந்தது.

பிரியங்கா சோப்ரா-வுக்கு இப்படியொரு தம்பியா..  பெரிய பிஸ்னஸ்மேனாம்..!!

சினிமா: பிரியங்கா சோப்ராவின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் சித்தார்த்தும் அவரது தாயார் மது சோப்ராவும் முக்கியப் பங்கை ஆற்றுகின்றனர். பர்ப்பிள் பெபிள் பிக்சர்ஸ் என்ற பிரியங்காவின் நிறுவனம் பிராந்திய திரைப்படங்களையும் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் பட்ஜெட் சினிமாக்களைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது.

வெண்டிலேட்டர், பானி ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இரு படங்களுக்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு சித்தார்த் தனது புதிய விவசாயத் திட்டமான சோப்ரா பார்ம்ஸை தொடங்கினார்.

விவசாயம் - உணவு பிஸ்னஸ்: 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சித்தார்த் சோப்ரா, சோப்ரா பார்ம்ஸை என்னும் விவசாய நிறுவனத்தை தொடங்கினார். சீசனல், பிரஸ் ஆர்கானிக் உணவுகளை தயாரித்து விற்று வருகிறார். சோப்ரா குடும்பம் இதில் இணைந்து செயல்படுகிறது.

தனது தொழில் பற்றி சித்தார்த் வெளியிட்ட விடியோவில், சரியான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

ரசாயன உரம் முறையில் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஏற்படக்கூடிய மோசமான உடல்நல பாதிப்புகளை எடுத்துரைத்தார்.

பருவகால, புதிய மற்றும் இயற்கை உணவு விருப்பங்களை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சோப்ரா பண்ணைகளைத் தொடங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.

காதல் கதை: சித்தார்த் சோப்ரா மற்றும் நீலம் உபாத்யாயாவின் உறவு பற்றிய வதந்திகள் 2019 இல் அம்பானி வீட்டின் விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது வெளிவந்தன. 2020 இல் அம்பானிகளின் ஹோலி விருந்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸுடன் அவர்கள் ஒன்றாகக் காணப்பட்டனர். இது அவர்களின் டேட்டிங் நிலை குறித்த ஊகங்களை மேலும் தூண்டியது.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+