கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரியங்கா காந்தி சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர், ராபர்ட் வத்ராவின் வருமானம் ரூ.55 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக குறைந்துள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் தங்கம், வெள்ளி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வைத்துள்ளதாக அதில் கூறியுள்ளார். மொத்த சொத்துகளில் ரூ.4.24 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.7.74 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் கொண்டுள்ளார். அதேபோல், மேலும், அவர் இரண்டு எஃப்ஐஆர்கள் உள்ளதாக அந்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவின் மொத்த வருமானம் ரூ.55.58 லட்சமாக இருந்ததாகவும், இது 2020-21 நிதியாண்டில் ரூ.11.38 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், 2021-22 நிதியாண்டு ரூ.9.03 லட்சம், 2022-23 நிதியாண்டு ரூ.9.35 லட்சம் மற்றும் 2023-24 நிதியாண்டுக்கான ரூ.15.09 லட்சம் அவரது வருமானம் என காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதேபோல், 2019-20 நிதியாண்டில் பிரியங்கா காந்தியின் வருமானம் ரூ.69 லட்சமாக இருந்ததாகவும், 2020-21 நிதியாண்டில் ரூ.19.81 லட்சமாக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது வருமானம் 2021-22 நிதியாண்டில் ரூ.45.56 லட்சமாகவும், 2022-23 நிதியாண்டில் ரூ.47.21 லட்சமாகவும், 2023-24 நிதியாண்டில் ரூ.46.39 லட்சமாகவும் உள்ளதாக கூறியுள்ளார். இவற்றில் வாடகை வருமானம், மற்றும் பிற முதலீடுகளின் வட்டி ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல், மூன்று வங்கிக் கணக்குகளில் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு, பிபிஎஃப், ராபர்ட் வத்ரா பரிசளித்த ஹோண்டா சிஆர்வி கார், ரூ.1.15 கோடி மதிப்புள்ள 4,400 கிராம் தங்கம் உள்ளிட்ட ரூ.4.24 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளை பிரியங்கா காந்தி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது அசையா சொத்துக்கள் மொத்தம் ரூ.7.74 கோடிக்கு மேல் மதிப்பு கொண்டவை ஆகும். இதில் புது டெல்லியில் உள்ள மெஹ்ராலியில் உள்ள இரண்டு பரம்பரை விவசாய நிலங்கள் மற்றும் ஒரு பண்ணை வீடு கட்டிடத்தில் பாதி பங்குகள் இவருக்கு உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இப்போது ரூ.2.10 கோடிக்கு மேல் மதிப்பு கொண்டவை.
அத்துடன் அவர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் சொந்தமாக வாங்கிய குடியிருப்பு ஒன்றை வைத்திருக்கிறார். அதன் மதிப்பு தற்போது ரூ.5.63 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
பிரியங்கா, யுகே, சுந்தர்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் புத்த மதக் கல்வியில் முதுகலை டிப்ளமோ மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் பிஏ ஹானர்ஸ் பட்டம் பெற்றுள்ளார். இவர் மீது ரூ.15.75 லட்சம் கடன் உள்ளதாக அந்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் காட்டப்பட்டுள்ளது.
அவர் 2012-13 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் ரூ.15 லட்சத்திற்கு மேல் வரி செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தி மீது எஃப்ஐஆர்: பிரியங்கா காந்தி மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று 2023 இல் மத்தியப் பிரதேசத்தில் தவறான ட்வீட்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர் புகாரின் அடிப்படையில் IPC பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 469 (போலி செய்தல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு 2020 இல் உத்தரபிரதேசத்தில் IPC இன் பிரிவுகள் 188 (அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல்), 269 (நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது) மற்றும் 270 (தொற்று பரவும் அபாயகரமான செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிராக பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி இருவரும் 2020 ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட தலித் ஒருவரின் குடும்பத்தை சந்திக்க ஹத்ராஸ் நோக்கி நடைபயணத்தின் போது CrPC பிரிவு 144 மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் தடை உத்தரவுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications