கேரள வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனக்கு 12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல், அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு ரூ.65.54 கோடி சொத்து இருப்பதாகவும் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியுள்ளார். அதில் குறிப்பாக ஒரே மியூச்சுவல் ஃபண்ட்-ல் அவர் ரூ.2.25 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த மியூச்சுவல் ஃபண்ட் பெயர் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
பிரியங்கா காந்தி அவரது தொழிலதிபர் கணவர் ராபர்ட் வதேராவின் சொத்துக்கள் உட்பட ஒட்டுமொத்தமாக கணவருக்கும் தனக்கும் ரூ.88 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக அந்த வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வெளிப்படுத்தல், அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் சமர்பிக்க வேண்டிய பிரமாணப் பத்திரத்தின் ஒரு பகுதியாகும்.

பிரியங்கா காந்தி நிகர மதிப்பு: பிரியங்கா காந்தி தனது பெயரில் உள்ள சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், அதில் ரூ.5.64 கோடி மதிப்புள்ள சிம்லாவில் 12,000 சதுர அடியில் பண்ணை வீடும், ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அவர் ஒரே ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-ல் முதலீடு செய்துள்ளார். அது ஃபிராங்க்ளின் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் ஆகும். இது ரூ. 2.24 கோடி முதலீடு அவரது போர்ட்ஃபோலியோவின் முக்கியமான முதலீடாக உள்ளது. செப்டம்பர் 30 வரை இந்த நிதியின் 13,200 யூனிட்களை அவர் வைத்திருக்கிறார்.
மேலும், பிரியங்காவின் நகைகளின் மதிப்பு ரூ. 1.16 கோடி ஆக உள்ளது. அவர் தனது சகோதரர் ராகுல் காந்தி உட்பட தனக்கும் சொந்தமான ரூ.2.10 கோடி மதிப்புள்ள மெஹ்ராலியில் விவசாய நிலம் வைத்துள்ளார். இதற்கிடையில், அவரது வருமானம் முந்தைய நிதியாண்டில் ரூ. 46.39 லட்சமாக இருந்தது. இது வட்டி மற்றும் வாடகை வருமானத்தில் இருந்து வந்துள்ளது.
ராகுல் காந்தியின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்:மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் ராகுல் காந்தி ஏழு ஃபண்டுகளில் ரூ.3.81 கோடி முதலீடு செய்துள்ளார். இதுகுறித்து அவர், கடந்த மே மாதம், தேர்தல் வேட்புமனு தாக்கலில் வெளியிட்ட சொத்து விவரத்தில் கூறியிருந்தார். அதில், HDFC ஸ்மால் கேப் ரெகுலர் குரோத் ஃபண்ட் ஆனது அவரது மிகப்பெரிய பங்கு ஆகும். இது ரூ.1.23கோடி ஆகும். இது கடந்த ஆண்டில் அதன் நிகர சொத்து மதிப்பில் (NAV) 51.85% உயர்வைக் கண்டது.
மற்ற முதலீடுகளில் ஐசிஐசிஐ புருடென்ஷியல் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்டில் ரூ.1.02 கோடியும், எச்டிஎஃப்சி ஹைப்ரிட் டெப்ட் ஃபண்டில் குரோத் ரூ.79 லட்சமும் உள்ளன.
கணவர் ராபர்ட் வதேராவின் சொத்துக்கள்: பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா ரூ.37.9 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் மற்றும் மொத்தம் ரூ.27.64 கோடி அசையா சொத்துகளை கொண்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவலின்படி, வாகனங்கள் மற்றும் பல்வேறு பிசினஸ்கள் அவர் செய்து வருகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications