பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும் என நம்பும் பலருக்கு இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது.
ஈக்விட்டி எஃப்&ஓ பிரிவில் ஈடுபடும் தனிப்பட்ட வர்த்தகர்களின் லாபம் மற்றும் இழப்பு குறித்துச் செபி அமைப்பின் பொருளாதாரம் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வுத் துறை முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல முக்கியமான விஷயங்கள் வெளியாகியுள்ளது மட்டும் அல்லாமல் புதியதாக ஈக்விட்டி எஃப்&ஓ பிரிவில் முதலீடு செய்யத் திட்டமிடுவோரைப் பயமுறுத்தியுள்ளது.
ஈக்விட்டி F&O
ஈக்விட்டி F&O பிரிவில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் வர்த்தகத்தில் ஏற்பட்ட நிகர லாபம்/நஷ்டம் தொடர்பாக FY19 மற்றும் FY22 ஆகிய காலகட்டங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது செபி அமைப்பு. 2019 மற்றும் 2022 ஆம் நிதியாண்டைத் தேர்வு செய்ய முக்கியமான காரணம் உள்ளது.
தனிப்பட்ட முதலீட்டாளர்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில் ஈக்விட்டி F&O பிரிவில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் வருகை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன்னும் பின்னும் நிலவிய சந்தை போக்குகளை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்துள்ளது.
டாப் 10 ப்ரோக்கரேஜ் நிறுவனம்
ஈக்விட்டி F&O பிரிவு வர்த்தகத்தில் பங்குபெற்ற தனிநபர் வர்த்தகர்கள் எண்ணிக்கை டாப் 10 ப்ரோக்கரேஜ் நிறுவனத்தில் இருந்து திரட்டப்பட்ட நிலையில் 2022ஆம் நிதியாண்டில் மொத்த எண்ணிக்கை 45.2 லட்சமாக இருந்தது, இதுவே 2019 ஆம் நிதியாண்டில் 7.1 லட்சமாக உள்ளது.
இளம் முதலீட்டாளர்கள்
2019 ஆம் நிதியாண்டு உடன் ஒப்பிடும்போது 2022 ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 500 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 88 சதவீத வர்த்தகர்கள் ஆக்டிவாக டிரேடிங் செய்யப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் நிதியாண்டில் 30-40 வயதுக்குட்பட்ட தனிப்பட்ட வர்த்தகர்கள் அளவு மொத்த வர்த்தகர்களில் 39%, 20-30 வயதுக்குட்பட்ட இளம் தனிப்பட்ட வர்த்தகர்களின் அளவீடு FY19ல் 11% லிருந்து FY22 இல் 36% ஆக அதிகரித்துள்ளது.
சராசரியாக 1 லட்சம் ரூபாய் நஷ்டம்
இந்த நிலையில் ஈக்விட்டி F&O பிரிவு வர்த்தகத்தில் பங்குபெற்ற தனிநபர் வர்த்தகர்களில் 89 சதவீதம் பேர் 2022 ஆம் நிதியாண்டு காலத்தில் சராசரியாக 1.1 லட்சம் ரூபாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். சராசரியாகவே 1 லட்சம் என்றால் அதிகமாகப் படியான நஷ்டம் பல கோடிகளைத் தாண்டும் போலையே.
51 சதவீத லாபம்
இதேபோல் ஈக்விட்டி F&O பிரிவு வர்த்தகத்தில் வெறும் 11 சதவீதம் பேர் மட்டுமே லாபத்தைப் பெற்ற நிலையில் இப்பிரிவினரின் சராசரி லாப அளவுகள் 1.5 லட்சமாக உள்ளது. இதோடு 2022 ஆம் நிதியாண்டில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 45.2 லட்சம் வர்த்தகர்களில் 1 சதவீதத்தினர் மட்டுமே மொத்த லாபத்தில் 51 சதவீதத்தைப் பெற்றுள்ளனர்.
பரிமாற்ற கட்டணம்
இதேவேளையில் ஈக்விட்டி F&O பிரிவு வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக இருப்பது மட்டும் அல்லாமல் லாபத்தில் பெரும் பகுதியைப் பரிமாற்ற கட்டணமாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் நஷ்டம் அடைந்த பெரும்பாலான வர்த்தகர்கள் 25-35 சதவீத இழப்பைப் பரிமாற்ற கட்டணம் வாயிலாக இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பரிமாற்ற கட்டணம் வாயிலாக முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பு, ஆனால் ப்ரோகரேஜ் நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளனர்.
பரிமாற்ற கட்டணம்
இதேவேளையில் ஈக்விட்டி F&O பிரிவு வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக இருப்பது மட்டும் அல்லாமல் லாபத்தில் பெரும் பகுதியைப் பரிமாற்ற கட்டணமாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் நஷ்டம் அடைந்த பெரும்பாலான வர்த்தகர்கள் 25-35 சதவீத இழப்பைப் பரிமாற்ற கட்டணம் வாயிலாக இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பரிமாற்ற கட்டணம் வாயிலாக முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பு, ஆனால் ப்ரோகரேஜ் நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபத்தைப் பெற்றுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications