கல்வி என்பது அனைவருக்குமே தேவையான முக்கியமான விஷயம். இந்தியாவில் கோடிக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொருட்டு தற்போது படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 30 கோடி பேர் மாணவர்களாக உள்ளனர். இவர்களுக்கு பேனா, பென்சில், நோட் புக் என பல விஷயங்கள் தேவைப்படும். அவற்றையே ஒரு தொழிலாக மாற்றினால் எப்படி இருக்கும்? ஆம் இந்த பதிவில் நோட்புக் தயாரிக்கும் தொழில் குறித்த தான் பார்க்க உள்ளோம். அதற்கு எவ்வளவு முதலீடு தேவை? எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்கள் அனைத்தையும் பார்ப்போம்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் நோட்புக் அவசியம். இதை ஒரு தொழிலாக மாற்றுவது உங்களுக்கு லாபகரமான வாய்ப்பாக இருக்கும்.

நோட்புக் தொழில் தொடங்குவது எப்படி?: அதற்கு நீங்கள் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும். இதை சரிவர நடத்த தெரிந்தால் உங்களுக்கு நஷ்டமே வராது. உங்களுடைய தொழிற்சாலையில் நோட்புக் மட்டும் இன்றி ஸ்கிராப் புக், டிராயிங் புக், ரெக்கார்ட் நோட் என பலவிதமான புக்குகளை தயார் செய்யலாம்.
எப்படி ஆரம்பிப்பது?: நோட்புக் கம்பெனி தொடங்க மூலப்பொருள் எங்கு கிடைக்கும் என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு மெஷின் எங்கு வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் இருந்து தொழிற்சாலை தொடங்கப் போகிறீர்களா அல்லது வெளியில் தொடங்கப் போகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேலை வெளியில் தொழிற்சாலை ஆரம்பிப்பதாக இருந்தால் அதற்கு இடம் தேவைப்படும்.
இதற்கு முன்னர் சில பதிவுகளில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சில பிசினஸ் ஐடியாக்களை பார்த்தோம். ஆனால் இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு கண்டிப்பாக கணிசமான முதலீடு தேவைப்படும். தொழிற்சாலை அமைப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகலாம். பிரதான் மந்திரி முத்ரா லோன்களும் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் இதை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: தொழிற்சாலை எல்லாம் அமைத்து நோட்புக்குகள் தயாரித்து சரியாக மார்க்கெட்டிங் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதேபோல தொழிற்சாலை அமைத்து அதில் சரிவர லாபம் கிடைக்காமல் கஷ்டப்படும் உரிமையாளர்களும் இருக்கின்றனர். எனவே எந்த ஒரு தொழிலை ஆரம்பித்தாலும் அதற்கு கிடைக்கும் வருமானம் இவ்வளவுதான் என்பதை உறுதியாக கூறி விட முடியாது. உங்களுக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்கள், உங்கள் நோட்புக்குகளை வாங்கும் கடைகள் என பல காரணிகளைப் பொறுத்து தான் உங்களுடைய வருமானம் அமையும்.
பல குழந்தைகள் மாதத்திற்கு ஒரு ரஃப் நோட்டாவது வாங்கி பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கையில் நோட் தயாரிக்கும் தொழில் கண்டிப்பாக லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள பதிவு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஐடியா மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் தொடங்குங்கள்.


Click it and Unblock the Notifications