சமீபத்திய காலமாக உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை காரணமாக சர்வதேச அளவில், பல்வேறு மூலப்பொருட்களின் விலையானது உச்சம் எட்டியுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் என்பது மிக மோசமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையில் பல்வேறு மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பால் சொத்துகளின் விலை விகிதமானது 7.5% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த 5 ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியாகும். இது குறித்த ராய்ட்டர்ஸ் கணிப்பில் அடுத்த ஆண்டில் வீடுகளின் விலை விகிதமானது 6% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து விலை அதிகரிக்கலாம்
இது குறித்து 13 சொத்து ஆய்வாளர்கள் 11 - 27ம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், நடப்பு ஆண்டில் சொத்துகளின் விலை விகிதமானது 5% அதிகரிக்கலாம் என கணித்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டில் பி எஸ் இ- இன்டெக்ஸில் உள்ள நிறுவனங்களின் விலை விகிதமானது 21% அதிகரித்துள்ளது. இதே இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 15% ஏற்றம் கண்டுள்ளது.
எவ்வளவு விலை அதிகரிக்கும்?
ராய்ட்டர்ஸ் ஆய்வின் படி, மும்பை, டெல்லி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வீடுகளின் விலை விகிதமானது 4 - 5% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் சென்னையில் விலையானது 5.5 - 6.5% மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கும்
வீடுகள் கட்ட தேவையான மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்துள்ள நிலையில், வீடுகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வட்டி விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் தேவை அதிகரிப்பினால் இது பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தாது எனலாம்.
வாடகை அதிகரிக்கலாம்
எனினும் நல்ல சம்பள அதிகரிப்பானது மேற்கொண்டு சந்தையில் இன்னும் தேவையினை ஊக்குவிக்கலாம். இதற்கிடையில் செலவினங்கள் அதிகரிப்பு, வட்டி அதிகரிப்பு என பல காரணிகளுக்கு மத்தியில், வாடகையும் அதிகரிக்கலாம். இது சாமானியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications