வங்கிகளில் வரலாற்றிலேயே குறைவான வட்டி விகிதம், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாரி வழங்கிய தள்ளுபடிகள் மூலம் மும்பையில் கடந்த 10 வருடம் இல்லாமல் அளவிற்கு ரியல் எஸ்டேட் விற்பனை உச்சத்தைத் தொட்டு உள்ளது.
மும்பை
இதன் மூலம் நாட்டிலேயே மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வர்த்தகத்தைப் பெற்ற நகரம் என்ற பெயரை மும்பை தொடர்ந்து தக்கவைத்து உள்ளது. 2021ல் மட்டும் மும்பையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளது, இது கடந்த 10 வருடத்தில் அதிகமாகும்.
ரியல் எஸ்டேட் பதிவுகள்
மும்பையில் ரியல் எஸ்டேட் பதிவுகள் அதிகமாக முக்கியக் காரணம் கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறையும், வேலைவாய்ப்பு சந்தையும் மீட்டு எடுப்பதற்காக மகாராஷ்டிர அரசு புதிய வீட்டு மனை விற்பனைக்கான பத்திரப் பதிவு வரியைப் பெரிய அளவில் குறைத்தது.
சொந்த வீடுகள்
இதனால் மக்கள் மிகவும் ஆர்வமுடன் சொந்த வீடுகளை வாங்க முன்வந்தனர். இந்தப் பத்திர பதிவு கட்டணம் குறைந்தது பெரும் பணக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்தது போல், நடுத்தர மக்கள் சொத்து வீட்டை வாங்க லாக்டவுனும், வங்கியின் குறைவான வட்டியும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அதிகப்படியான சலுகைகள் உதவியது.
நவம்பர் டிசம்பர்
நவம்பர் மாதத்தில் 7,582 ரியல் எஸ்டேட் பதிவுகள் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் முதல் 3 மாதத்தில் 5,553 பதிவுகள் செய்யப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநில அரசு பத்திர பதிவு கட்டணமாக நவம்பர் மாதம் 549 கோடி ரூபாயும், டிசம்பர் மாதம் 421 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
122 சதவீதம் உயர்வு
க்னைட் பிராங்க் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் 2021ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையில் ரியல் எஸ்டேட் பதிவுகளின் எண்ணிக்கை 122 சதவீதம் அதிகரித்துள்ளது, இக்காலகட்டத்தில் பத்திர பதிவு கட்டணமாக 5,351 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தையும் மகாராஷ்டிர அரசு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications