சென்னை: ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக, இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் ஆகும்.
இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். நாடு முழுவதும் அடையாளத்திற்காகவும், முகவரிக்கான சான்றாகவும் ஆதார் எண் செயல்படுகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களை ஆன்லைன் வழியாக திருடும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இத்தகைய குற்றங்கள் மேலும் நடக்காதிருக்க அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் செயல்பட வேண்டும்.

எந்த ஒரு அரசு நிறுவனமோ அரசு சாரா நிறுவனமோ தனியார் நிறுவனமோ ஒருவரின் ஆதார் எண்ணை வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் கேஒய்சி சரிபார்ப்பு போன்றவற்றிற்கு ஆதார் எண்ணைக் கேட்கின்றன. அவ்வாறு கேட்பின் அது அந்த நபரின் அனுமதி பெற்றே வாங்க வேண்டும். உங்களுடைய ஆதார் எண்ணை பிறருக்கு வழங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..
1) தொலைபேசி வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவோ யாரேனும் ஒருவர் உங்களுக்கு போன் செய்து உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை கேட்டால் எந்த காரணத்திற்காகவும் உங்களின் ஆதார் எண்ணை நீங்கள் பகிரக்கூடாது. அவ்வாறு பகிரப்படும் பொழுது உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் அனைத்து தகவல்களும் வேறு ஒரு நபரால் திருடப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து நடக்க வேண்டும்.
2) வங்கி கணக்கு, பரஸ்பர நிதிகள், பான் கார்டு, காப்பீட்டுக் கொள்கை, பணியாளர் வருங்கால வைப்பு நிதி, சிறு சேமிப்புத் திட்டம், உதவித்தொகை கணக்கு, ரேஷன்கார்டு, தொலைபேசி எண், IRCTC கணக்கு, ஓட்டுநர் உரிமம், LPG இணைப்பு என ஒரு சாதாரண மனிதனின் அனைத்து அத்தியாவசிய தேவைகளுடனும் ஆதார் எண்ணானது இணைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தனி நபரின் ஆதார் எண்ணானது மற்றவர்களுக்கு தெரியும்பொழுது அவர்களின் தனிப்பட்ட விஷயங்களும் தெரிய வருகிறது.
3) ஒருவரது ஆதார் எண் தவறான நோக்கத்தில் மற்றவர்களால் அறியப்படும் பொழுது முதலில் நடக்கும் குற்றமே அவர்களின் வங்கியில் இருந்து பெரிய அளவிலான தொகை திருடப்படுவது தான்.
4) ஒரு சிலருக்கு தங்களது ஆதார் நம்பரை பகிர்வதில் விருப்பம் இல்லை எனும் பட்சத்தில், சில சேவைகளுக்கு வெர்ச்சுவல் ஐடென்டிஃபையர் என்று சொல்லப்படுகிற VID ஐ, பகிரலாம்.
5) m-Aadhaar என்ற செயலியின் வாயிலாக ஒருவரின் ஆதார் பற்றிய தகவல்களை அறியமுடியும். குறிப்பாக கடந்த ஆறு மாதம் வரையுள்ள தகவல்களை துல்லியமாக பெறும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம்.
6) உங்களுடைய மெயில் ஐடியை ஆதார் கார்டுடன் இணைக்கும்போது, எந்த ஒரு செயல்முறையையும் UIDAI உங்களுக்கு மெயில் வாயிலாக அறிவிக்கும்.
7) மெயில் ஐடியை போலவே, உங்கள் மொபைல் நம்பரும் ஆதார் கார்டுடன் இணைந்திருக்க வேண்டும்.
8) நீங்கள் ஏதேனும் வகையில் உங்களது ஆதார் கார்டு தவறான முறையில் பயன்படுத்தபடுவதாக உணர்ந்தால், 1947 என்ற யூஐடிஏஐ ஹெல்ப்லைன் நம்பருக்குத் தொடர்பு கொள்ளலாம். இது 24/7 மணி நேரமும் செயல்படக்கூடிய இலவச அழைப்பாகும். நீங்கள் [email protected] என்ற மெயில் ஐடியை பயன்படுத்தியும் இதனைத் தெரிவிக்கலாம்.
ஆதார் எண்ணை மையமாகக்கொண்டு நடைபெறும் பலவிதமான மோசடிகளையும் குற்றங்களையும் தடுக்கும் வகையில் அரசு பல வழிவகை செய்துள்ளது. அவற்றை முறையாக பின்பற்றினால் பொதுமக்கள் பல பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications