TCS அலுவலகத்தில் மதம் சார்ந்த பிரச்சனைகளை அடுத்தடுத்து வெடித்து வருகிறது, சமீபத்தில் நாசிக் அலுவலகத்தில் மத மாற்றம் முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து பின்பு பூதாகரமானது. இந்த நிலையில் தெலங்கானாவில் ஒரு புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் ஆதிபட்லா TCS அலுவலகம் முன்பு, நேற்று திடீரென ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிசிஎஸ் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டையிட்டனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் நேற்று வெளியாகி அதிர்ச்சி அளித்தது.

இந்த பிரச்சனைக்கான காரணம் சபரிமலை ஐயப்ப சாமிக்கு மாலைப் போட்டுக்கொண்ட ஊழியர் ஒருவரை அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க மறுக்கப்பட்டது மூலம் இந்த போராட்டம் வெடித்ததுள்ளது. உண்மையில் என்ன நடந்தது..?
கடந்த 2 ஆண்டுகளாக மனிஷ் என்ற TCS ஊழியர் அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், இவர் ஐயப்ப சாமிக்கு மாலைபோடுவதாக 2 மாதங்களுக்கு முன்பே டிசிஎஸ் நிர்வாகத்திடமும், தனது டீம் மேனேஜரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறுகிறார்.
இந்த நிலையில், நேற்று ஐயப்ப சாமிக்கு மாலைபோட்டுக் கொண்டு கருப்பு சட்டை, துண்டு, வேஷ்டி உடன் பாரம்பரிய உடையில் அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்போது தன்னை நிறுவனத்தின் Dress Code-ஐ பின்பற்றவில்லை எனக் கூறி செக்யூரிட்டி அதிகாரிகள் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என மனிஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் மனிஷ் கூறுகையில், மற்ற ஊழியர்கள் Dress Code பின்பற்றாமல் வந்தபோதும் அனுமதிக்கப்பட்டதாகவும், தன்னை சபரிமலைக்கு மாலைபோட்ட பின்பு தன்மை மட்டும் ஏன் அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை என மனிஷ் தெரிவித்தார்.
இதுமட்டும் அல்லாமல் மனிஷன் தனது உயரதிகாரியான சிகேந்தர் ஷா பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தன்னை உள்ளே நுழைய விடாமல் இருப்பதற்கு அவர் தான் காரணம் எனவும் தெரிவித்தார் மனிஷ்.
டிசிஎஸ் அலுவலகம் முன்பு போராட்டம், இணையத்தில் வீடியோ வைரல் என பிரச்சனை பெரியதாகவே இந்த விவகாரம் போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மனிஷ் சபரிமலைக்கு மாலையிட்டு வந்தது எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்றும், அவர் வேட்டி அணிந்து வந்தது தான் இப்பிரச்சனைக்கு அடிப்படை.
டிசிஎஸ் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் பணியாற்றும் காரணத்தால் அந்த உடை, கலாச்சாரம் அவர்களுக்கு புரியாமல் போகலாம் என்பதால் HR அதிகாரிகள் மனிஷ்-ஐ பேன்ட் அணிந்து வருமாறு கேட்டுள்ளனர் என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் உள்ளே வர அனுமதி இல்லை என தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும், மேலும் இது மதரீதியான அல்லது இந்து - முஸ்லிம் பிரச்சினை கிடையாது என்றும் போலீசார் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளனர். இதோடு மனிஷ்-ம் சரி, டிசிஎஸ் நிர்வாகமும் சரி எவ்விதமான புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை என்றும் போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மேலும் இன்று ஆதிபட்லா TCS அலுவலகம் இயல்பாக இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications