இந்திய குரூப் கேப்டனான சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களோடு விண்வெளிக்கு சென்ற டிராகன் விண்கலம் வெற்றிகரமாக நால்வரையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறக்கியது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியர் ஒருவர் கால் பதித்திருக்கிறார்.
ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் சுலாவோஸ் உஸ்வான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் டிபோர் கபு ஆகியோரை விண்வெளிக்கு சுமந்து சென்றது. நேற்று பூமியில் இருந்து புறப்பட்ட இவர்கள் இன்று திட்டமிட்டபடி மாலை 4:30 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டு, விண்கலத்தில் இருந்த நான்கு வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்த திட்டத்தில் விண்கலத்தை இயக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தது இந்தியரான சுபான்ஷூ சுக்லா தான்.
கடந்த 1984 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் இந்தியா முதன் முறையாக விமானப்படை விங் கமாண்டரான ராகேஷ் சர்மாவை விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. அப்போது ராகேஷ் சர்மா ரஷ்யாவின் சல்யூட் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள் தங்கி இருந்தார். அதன் பின்னர் இந்தியர் யாரும் விண்வெளிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுத்தது. இதில் இந்தியா சார்பாக விண்ணுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் சுபான்ஷூ சுக்லாவும் ஒருவர். இவர் ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர். ககன்யான் திட்டத்திற்கு முன்பாகவே இவர் ஆக்ஸியம் 4 திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றிருக்கிறார்.
ராகேஷ் சர்மாவுக்கு அடுத்ததாக 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள். அங்கே அவர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட இருக்கின்றனர் .
நாசா மற்றும் இஸ்ரோ ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அறிவியல் ஆய்வுகளை சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்துகின்றன. தசை மீள் உருவாக்கம், உண்ணக்கூடிய நுண்ணுயிர்களின் வளர்ச்சி , சிறிய நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகளில் சுபான்ஷூ சுக்லா ஈடுபட இருக்கிறார். முன்னதாக டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசிய சுபான்ஷூ சுக்லா நான் ஒரு குழந்தையை போல விண்வெளியில் எப்படி நடந்து கொள்வது என கற்றுக் கொண்டு வருகிறேன் என தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications